சிம்புதேவன் உடன் நேர்காணல் ஒன்றை நடத்தி அவருடன் ஜோடி சேர்ந்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார் பனிமலர் பன்னீர்செல்வம்.. இந்த சந்திப்பு எவ்வாறு நடந்தது காரணம் என்ன எனவும் பனிமலர் விவரித்துள்ளார் இது குறித்து அவர்குறிப்பிட்ட பதிவுகள் பின்வருமாறு :
இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சல், தலைவலி, அல்சர் தொந்தரவும் உச்சத்தில் வாட்டிக்கொண்டிருந்தது. நேற்று கட்டாயம் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நிலையில் சென்றுவிட்டேன். முதல் செய்தி முடியும் முன்னரே கண்ணில் தண்ணீர் வரும் அளவு உடல் சூடாகிவிட்டது. மீண்டும் மாத்திரை சாப்பிட்டுவிட்டு அடுத்த செய்திக்கு தயாரானால் சிம்பு தேவன் அவர்களுடைய நேர்காணல் செய்ய வேண்டும் வேறு யாரும் இல்லை என கேட்டார்கள்.
முதலில் ஒத்துக்கொண்டாலும் உடல்நிலை மோசமாக இருந்ததால் எப்படியாவது தவிர்க்க முயற்சித்தேன். வேறு வழியே இல்லை என்ற நிலையில் அவருடைய கசடதபற திரைப்படம் பற்றிய நேர்காணலுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் படத்தை பார்த்து சில குறிப்புகளும் அவரைப் பற்றிய சில குறிப்புகளும் சொன்னார்கள்.
எந்த சுவாராஸ்யமும் இல்லாமல் கேட்டுக்கொண்டேன். சிம்பு தேவன் அவர்களின் அலுவலகம் சென்று நிகழ்ச்சியை தொடங்கும்வரை என்னுடைய ஒட்டுமொத்த எனர்ஜியையும் பவர் சேவிங் மோடில் வைத்திருந்தேன் அந்த நிலையில்தான் உடல்நிலை இருந்தது. நேர்காணல் தொடங்கியதும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சொன்ன விசயங்களோடு எனக்கு அவரிடம் கேட்க வேண்டும் என்றிருந்த கேள்விகளையும் சேர்த்துக் கேட்டு பதிலைப் பெற்றேன்.
இடையிலேயே கேள்விகள் அருமையாக இருக்கிறது யார் தயார் செய்தார்கள் எனக்கேட்டார். மீண்டும் நேரலை முடிந்ததும் வெகுவாக பாராட்டினார். நான் புகைப்படம் எடுத்ததை டிவிட்டரில் பதிவு செய்திருந்தேன். அதிலும் பாராட்டியிருக்கிறார். குழுவினருக்கு வாழ்த்துகள். என்னை அழைத்துச் சென்றதற்கு நன்றி.
உண்மையில் நேற்று இந்த நிகழ்விற்குப் பிறகு என் சோர்வெல்லாம் போய்விட்டது. எந்த ஒரு சிறு வாய்ப்பையும் ஏதாவது ஒரு காரணத்திற்காக தவறவிட்டால் பெரிய மகிழ்ச்சிகளை இழக்க நேரிடலாம் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணமாக நினைத்துக்கொண்டேன் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் சிலர் சத்யராஜ் குஸ்பு கூட்டணி போல் சிம்புதேவனும் பனிமலரும் திரையில் பெரியார் 2 திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என குசும்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.