Tamilnadu

ட்விட் போட்டு வம்பு இழுத்த சுந்தரவள்ளி 'குவியும்' பாமகவினர் ! இந்த முறை சிக்குவாரா ?

sundaravalli
sundaravalli

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு வன்னியர்களுக்கு என்று மிகவும் பிற்படுத்தப்பட்டியலில் 10.5% உள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லாது என நேற்று தீர்ப்பு அளித்தது, இந்த தகவல் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியவர்களை கடுமையாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில்.,


சிலர் தங்கள் அரசியல் லாபத்திற்காக வேண்டுமென்றே நீதிமன்ற தீர்ப்பை வைத்து சாயம் பூசி வருகின்றனர், அந்த வகையில் சுந்தரவள்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்துக்கள் கடும் கண்டனத்தை உண்டாக்கியுள்ளது, நீதிமன்றம் தீர்ப்பு குறித்த செய்தியை மேற்கோள் காட்டிய சுந்தரவள்ளி, சின்னவர் கண்ணீரெல்லாம் வீணா கோபால்....என நக்கல் அடித்துள்ளார்.

பாமகவினர் அன்புமணியை சின்னவர் என அழைத்து வரும் சூழலில் அதனை மறைமுகமாக நக்கல் அடித்து உள்ளார் சுந்தரவள்ளி, இது தவிர்த்து உடனடியாக இட ஒதுக்கீட்டை மீட்டு எடுப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் தமிழக அரசு விரைந்து எடுக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டிய சுந்தரவள்ளி ஐயா எலெக்ஷனுக்காக அவசரம் அவசரமா அள்ளி தெளிச்சது போல சட்டத்த போடும் போதே இது நடக்கும் னு எச்சரிச்சோம்.. அது இப்போ நடந்திருச்சு.

எல்லா பிற்படுத்தப்பாட்ட சாதிகளுக்கும் சேர வேண்டிய பங்கு கிடைக்கணும்...அதுக்கான வேலைய அரசு செய்யணும் என மீண்டும் பாமகவினரை சீண்டினார் சுந்தரவள்ளி, இதற்கு பதிலடி கொடுக்க பாமகவினர் அவரது ட்விட்டர் ஐடியில் குவிந்து வருகின்றனர், பலரும் சுந்தரவள்ளி கருத்தை அவருக்கு புரியும் படி அவரது பாணியில் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஒரு சில கருத்துக்கள் அச்சில் ஏற்ற முடியாத வகையில் இருக்கின்றன, இந்த சூழலில் தொடர்ந்து இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக ஒருதரப்பு அதிர்ச்சியில் உள்ள சூழலில் பாமகவை விமர்சனம் செய்வதாக எண்ணி ஓட்டு மொத்த வன்னியர் சமூகத்தையும் இழிவு படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.,

கல்யாணராமன், கிஷோர், சாட்டை துரைமுருகன் போன்றோரை கைது செய்த தமிழக காவல்துறை பதற்றத்தை உண்டாக்கும் வகையில் கருத்து பதிவிட்ட சுந்தரவள்ளியை கைது செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.