India

மகாராஷ்டிரா அரசியலில் கடும் பரபரப்பு கிளைமாக்ஸ் கட்டத்தை எட்டிய சிவசேனா ஆட்சி !

maharastra cm and dcm
maharastra cm and dcm

மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணியாக சட்டமன்ற பொது தேர்தலை எதிர்கொண்ட பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்ற சூழலில் முதல்வர் யார் என்று தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது, இந்த சூழலில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைத்தன.


கூட்டணி ஆட்சியின் முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார், பொறுப்பேற்றது முதல் எத்தனை நாட்கள் கூட்டணி ஆட்சி நீடிக்கும் என தெரிவில்லை என பலரும் சந்தேகத்தை எழுப்பினர், அதற்கு காரணம் மூன்று கட்சிகளும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாட்டை கொண்டவை, பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்தனர்.

ஆட்சி அமைந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த கூட்டணி ஆட்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, அதற்குக்காரணம் தற்போதைய மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர்  அஜித் பவாருக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010 ல் மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில், மாநில கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை ஆலை குறைந்த விலையில் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது, கூட்டுறவு வங்கியின் கூட்டுறவு வங்கியின் இயக்குநர்கள் வாரியத்தில் பிரதான உறுப்பினராக இருந்த, தற்போதை துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித் பவார் இருந்தார். அந்த ஆலையை வாங்க உபயோகப்படுத்தப்பட்ட நிதிகளில் .,

பெரும்பாலான தொகை அஜித்பவாருக்கு சொந்தமான 'ஸ்பார்க்லிங் சாயில் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதும், இந்த ஆலையை வைத்து வங்கிகளில் பல கோடி கடன் ரூபாய் பெறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் ரூ.65.75 கோடி மதிப்பிலான அந்த சர்க்கரை ஆலையை முடக்கினர். வரி ஏய்ப்பு புகாரில் அஜித் பவாரின் சகோதரிகள் உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த அக்., 7 ம் தேதி சோதனை நடத்தினர். இதனுடன் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சிலவற்றிலும் சோதனை நடந்தது. 

இதில் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பது கண்டறியபட்ட சூழலில் அஜித் பவாருக்கு சொந்தமான 1000 கோடி சொத்துக்கள் முடக்க பட்டுள்ளன, நேற்றைய தினம் இதே மகாராஷ்டிரா சிவசேனா அரசின் அமைச்சரவையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் அணில் தேஷ்முக்  அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.  விரைவில் அஜித் பவாரும் கைது செய்யப்படலாம் என்பதால் விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் கைது விவகாரத்தில் ஆளும் கட்சியான சிவசேனா ஷாருக்கான் மகனிற்கு ஆதரவாக, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி வாங்கடேவிற்கு அழுத்தம் கொடுத்த தாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மகாராஷ்டிரா அரசியலில் ஆளும் கூட்டணி அரசை முடிவிற்கு கொண்டு வர முழு வீச்சில் இறங்கியுள்ளதாம் பாஜக.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக முன்னாள் முதல்வர் பட்நாவிஸ் தீபாவளிக்கு பிறகு முக்கிய ஆவணங்களை வெளியிட போகிறேன் என தெரிவித்து இருப்பது மஹாராஷ்டிரா ஆளும் கட்சியான சிவசேனா கூட்டணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.