Cinema

மீண்டும் பிரச்சனையில் மாட்டிய டிடிஎஃப்!! நோட்டீஸ் அனுப்பிய போலீசார்!!!

TTF
TTF

இணையங்களில் வீடியோக்களை பதிவிட்டு ட்ரெண்டானது போக தற்பொழுது ஏதாவது ஒரு கேசில் மாட்டி ட்ரெண்ட் ஆவதே இங்கு ஒருவரின் வேலையாக மாறிவிட்டது. அவர் யார்?? என்று தானே கேட்கிறீர்கள்!! வேற யாரும் இல்லை நம்ம டி டி எஃப் வாசல் தான்!!! முதலில் youtube வராகவும் சோசியல் இன்ஃப்ளுடன் இருந்து வந்த டிடிஎச் தனது இணையதள பக்கத்தில் அதிக அளவில் பைக் ரேஸ் மற்றும் பைக்கில் பல ஊர்களுக்கு பயணம் செல்வது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதன் மூலம் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்து வந்தனர். மேலும் இவருக்கு 2k கிட்ஸ் களின் ஆதரவு அதிக அளவிலேயே இருந்து வந்தது. இவருக்கு youtube இல் கிடைத்த வளர்ச்சி மிகவும் பெரிய அளவில் அதீத வளர்ச்சியாகவே இருந்து வந்தது. 


ஒருமுறை இவரின் பிறந்த நாள் அன்று அவரின் ரசிகர்களை சந்திக்க முடிவு செய்து சென்ற பொழுது பொது இடங்களில்  கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். அப்போதுதான் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா என்றும் இதற்கு முன்னால் பிடிஎப் வாசனை தெரியாதவர்கள் கூட அதன்பிறகு இருந்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு அடிக்கடி பல வழக்குகளில் சிக்கி வருகிறார். இவர் அதிவேகமாக வாகன ஓட்டி வீடியோவை போடுவதால் அதனை பார்த்து பலர் இதே போல நாமும் ஓட்ட வேண்டும் என்று தவறாக உதாரணம் எடுத்துக் கொள்கின்றனர் என்று இவர் மீது பலர் வழக்கு தொடுத்தனர். அதன் பிறகு ஸ்டாண்ட் செய்வது மற்றும் அதிவேகத்தில் செல்வது போன்றவற்றை படிப்படியாக குறைத்து விடுகிறேன் என்று டிடிஎஃப் வாசன் கூறினாலும் கூட ஒருபோதும் அவற்றை பின்பற்றியது கிடையாது. 

அதன் பிறகு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு 15 நாள் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கடந்த 2023ம் ஆண்டு காஞ்சிபுரம் அருகே பொதுவான சாலையில் பைக் ஸ்டண்ட் செய்து விபத்து ஏற்பட்டதால் அவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே இரண்டு பிரிவுகளின் கீழ் டி டி எப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் 3 பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு இருக்கும் பிரிவில் இவரை கைது செய்துள்ளனர். இது போன்ற தொடர்ந்து பல பிரச்சனைகளில் தொடர்ந்து மாட்டி வழக்குகளை எதிர்கொண்டு வரும் டிடிஎஃப் தற்பொழுது மீண்டும் ஒரு பிரச்சனையில் மாட்டி அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது!! தற்பொழுது என்ன பிரச்சனையில் மாட்டியுள்ளார் மற்றும் எந்த மாதிரியான வழக்கு அவர் மீது ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று விரிவாக காணலாம்.

சென்னை மதுரவாயல் அருகே டிடிஎஃப் வாசனுக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் அதிக அளவில் ஒலி எழுப்பக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட  சைலன்சர்களை விற்பனை செய்வதாக அவர் மீது பிரதமரின் அலுவலகத்திற்கு வந்த புகார் புகாரியின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  அம்பத்தூர் போக்குவரத்து துறை போலீசார் நேரடியாக டிடிஎப் வாசலில் இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு முறையாக விளக்கம் அளிப்பதற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் டிடிஎஃப் வாசன் தற்போது இந்த பிரச்சனைக்கு என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!! இது குறித்த செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!