Tamilnadu

பணத்தை கேட்ட பெண்ணுக்கு பளார்..தமிழகத்தை அதிர செய்த திமுக நிர்வாகி.. வெளியான திராவிடியா மாடல் ஆட்சியின் அவலம்... காட்டு தீயாக வைரலான் வீடியோ

mk stalin
mk stalin

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் பேசிவரும் நிலையில் 48 மணி நேரத்தில் எட்டுக் கொலைகள் நிகழ்ந்திருப்பது, மக்களை அச்சத்தில் உறையவைத்தது.இதுமட்டுமில்லாமல் தமிழ்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது என கூறிய முதல்வர் தலையில் இடியை இறக்கியது சில சம்பவங்கள். 



சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பணி முடித்து விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த மருத்துவப் பயிற்சி மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தி.மு.க., ஆட்சியில், அண்ணா பல்கலை வளாகம் முதல் அரசு மருத்துவக்கல்லூரி வளாகம் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது மேலும் பாலியல் தாக்குதலின் போது பயிற்சி மாணவியின் கூக்குரல் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்ததன் காரணமாகவே மாணவியைக் காப்பாற்ற முடிந்துள்ளது. இந்த சம்பவம் சிவகங்கை முழுதுவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.


சென்னை ஈ.சி.ஆர் பகுதியில்  திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 6க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில்  பெண்களின் காரை குறுக்காக நிறுத்தினர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடுத்ததாக கள்ளக்குறிச்சியில் நெடுஞ்சாலையில் காரில் சென்ற குடும்பத்தினரிடம்  காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்கள் அட்டூழியம் செய்தார்கள். 


கடலூரில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்ற திமுக பிரமுகர் மீண்டும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட வந்தபோது பெண் ஊழியர் காசை திருப்பி கேட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் பெண் ஊழியர் வேண்டும் பாராமல் அவரை கன்னத்தில் அடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த 37 வயதான பெண் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் பணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் பண்ருட்டி விழமங்கலம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சீனு என்பவர் அதே பங்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுகொண்டு காசை பின்னர் தருவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால், திமுக பிரமுகர் சீனு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.


இந்த நிலையில் இன்று (மார்ச் 31) அதே பெட்ரோல் பங்கிற்கு வந்த திமுக பிரமுகர் சீனு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும்படி கேட்டுள்ளார். அதற்கு பெண் ஊழியர் ஏற்கனவே பெட்ரோல் போட்டுச் சென்ற நூறு ரூபாய் பணத்தை தரும்படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரத்தில் திமுக பிரமுகர் சீனு, பெண் ஊழியர் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி சட்டையை கிழித்து கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார்.இதைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் ஓடிச்சென்று தாக்குதலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் சீனுவை பிடித்துக் கொண்டனர். இதில் காயமடைந்த பெண் ஊழியர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இந்த நிலையில் திமுக பிரமுகர் சீனு பெண் ஊழியரை தாக்கக்கூடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது தொடர்பாக பெண் ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் என்றும் பாராமல் திமுக பிரமுகர் சீனு அவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண்ணுரிமை பேசும் கனிமொழியை கண்டா வர சொல்லுங்க என  எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்ப தொடங்கியுள்ளார்கள்