Tamilnadu

அண்ணாமலை குறித்து தமிழக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்..! பதறிகொண்டு அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின்..!

Annamalai and Stallin
Annamalai and Stallin

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் ஆளும் அரசை புரட்டி போட்டுள்ளது, குறிப்பாக லாவண்யா விவகாரம் வெறும் வழக்கு கைதுடன் முடிந்துவிடும் என ஆளும் தரப்பு எதிர்பார்த்த நிலையில் அது தேசிய அளவில் மிக பெரிய பாதிப்பை உண்டாக்கியுள்ளது.


பாஜக அல்லாத டெல்லி  முதல்வர் கெஜ்ரிவால் கட்டாய மதமாற்ற சட்டம் வேண்டும் என சொல்லும் அளவிற்கு லாவண்யா விவகாரம் மற்ற மாநில மக்களிடையே ஆளும் திமுக அரசிற்கு எதிர்ப்பை தேடி கொடுத்துள்ளது, குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் குடைச்சல் கொடுத்து அமைதியாக ஆட்சியை நடத்தலாம் என்று எதிர்பார்த்து காய் நகர்த்தியது திமுக.

ஆனால் அண்ணாமலை மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் அது அப்படியே தலைகீழாக மாறியது, தொடர்ந்து அமைச்சர்கள் மீது லஞ்ச புகார் அண்ணாமலை வைக்க அது மிக பெரிய அளவில் எதிரொலித்தது, அது ஒருபுறம் என்றால் அண்ணாமலை லாவண்யா விவகாரத்தை மிக பெரிய அளவில் ஆளும் கட்சிக்கு எதிராக கொண்டு சென்றுள்ளார்.

குறிப்பாக திமுக தொண்டர்கள் மத்தியில் கூட நாளை நமக்கும் ஏதேனும் சிறுபான்மையினர் மத்தியில் பிரச்சனை என்றால் தலைமை துணை இருக்குமா? இருக்காதா என்ற சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது, போதாத குறைக்கு பாஜக அல்லாத தமிழ் தேசியம் பேச கூடிய பலரும் இப்போது லாவண்யா விவகாரத்தில் ஆளும் அரசிற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தான் தமிழக உளவுத்துறை அறிக்கை ஒன்றை தமிழக முதல்வருக்கு கொடுத்துள்ளது அதில் எப்படி தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் அரசை எதிர்த்து அம்மாநில பாஜக செயல்பட்டு இடை தேர்தலில் ஆளும் அரசை வீழ்த்தியதோ அதே பார்முலாவை கையில் எடுத்து பாஜக தீவிரமாகசெயல்படுகிறது. குறிப்பாக செய்தியாளர்களை அண்ணாமலை கேள்வி எழுப்பும் விதம் பொது மக்கள் கவனத்தை பெற்றுள்ளது.

இதே நிலை நீடித்தால் மத ரீதியாக வாக்குகள் ஒருங்கிணைய தொடங்கும் இந்து vs வேறு மதம் என வாக்குகள் பிரிந்தால் அது கடும் பின்விளைவை வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு கொடுக்கும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர், இதையடுத்து உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் கடைசியாக.

தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் நடுநிலையுடன் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சொந்த விருப்பு - வெறுப்புகள் சிறிதளவும் தலையெடுக்க அனுமதிக்கவே கூடாது. நம்முைடைய வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களைப் போலவே கூட்டணி கட்சியினர் போட்டியிடும் இடங்களிலும் முழுமையான ஒருங்கிணைப்பும், உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பும் களப்பணியும் அமைதல் வேண்டும்.

கடந்த 8 மாதங்களில் நமது அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், அதனால் மக்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகள் குறித்து சரியாக எடுத்துச் சொல்லி வாக்கு சேகரியுங்கள்.அமைதியான சூழலும் - நல்லிணக்கமான வாழ்க்கையும் கொண்ட தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து,

கலவரத்தைத் தூண்டிவிட்டு, அதில் அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள். மக்கள் நலனுக்கு எதிரான இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டைப் பாழ்ப்படுத்த நினைப்பதை எடுத்துக் கூறுங்கள். மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழ்நாட்டு மக்களின் தனித்தன்மையை நினைவுபடுத்துங்கள்.

சமூகநீதி, சுயமரியாதை, சாதி வேறுபாடற்ற மதநல்லிணக்கம், ஒருங்கிணைந்த வளர்ச்சி இவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ அரசாக விளங்கும் தி.மு.க. அரசின் திட்டங்களும், செயல்பாடுகளுமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான நற்சான்றுக் கருவிகள். நல்லாட்சியின் விளைச்சலை, உள்ளாட்சியில் முழு வெற்றியாக அறுவடை செய்திட, ஊக்கத்துடன் அயராது பாடுபடுங்கள்.

அன்றும் இன்றும் மக்கள் நம் மீதே மாறா நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது என்றென்றும் தொடரும் வகையில் களப்பணியாற்றுங்கள். நகர்ப்புற உள்ளாட்சியில், நாடே போற்றிடும் வகையில் வெல்வோம்; நல்லாட்சியை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில் அண்ணாமலை குறித்து உளவுத்துறை கொடுத்த சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே முதல்வர் கடிதம் எழுதியதாக TNNEWS24 க்கு தகவல் கிடைத்துள்ளது, அண்ணாமலை செயல்பாடு நாளுக்கு நாள் பொது மக்கள் மத்தியிலும் எதிரொலிக்க தொடங்கியிருப்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் ஆளும் தரப்பு இறங்கியுள்ளதாம்.