லாவண்யா விவாகரம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் தாக்கத்தை உண்டாக்கி கொண்டே இருக்கிறது, பள்ளி மாணவி தனது சாவிற்கு மதம் மாற மறுத்ததும் காரணம் என சொல்லிவிட்டு வீடியோவாக பதிவு செய்துவிட்டு உயிர் இழந்தார், இது கடும் அதிர்வலைகளை நாடு முழுவதும் உண்டாக்கி இருக்கிறது, இந்த சூழலில் தமிழக காவல்துறை குற்றவாளிகளை காப்பாற்ற முயல்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
தொடர்ந்து மத ரீதியிலனா துன்புறுத்தல், இந்த வழக்கில் இல்லை என்றும் ஆரம்பம் முதலே தமிழக காவல்துறையும்,திமுக அமைச்சர்களும் சொல்லி வருகின்றனர் போதாத குறைக்கு தமிழக ஊடகங்களும் பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றும் நிலைக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
மாணவியை துன்பறுத்தி தற்கொலைக்கு தூண்டிய ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கைது செய்யபட்டுள்ளார்,இந்த சூழலில் இது வரை சகாய மேரி புகைப்படத்தை எந்த ஊடகங்களும் ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது, குறிப்பாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்ட போது நொடிக்கு நொடி அவரது புகைப்படத்தை நேரலையில் ஒளிபரப்பிய தமிழக ஊடகங்கள் இந்த முறை சகாய மேரி முகத்தை கூட காட்டாதது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பரிசாலன் என்பவர் தனியார் யூடுப் சேனல் ஒன்றில் கேள்வி எழுப்பியிருக்கும் சூழலில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது,குற்றவாளி புகைப்படத்தை ஏன் ஊடகங்கள் இதுநாள் வரை வெளியிடவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாகியுள்ளது.
மொத்தத்தில் தமிழக ஊடகங்கள் இந்த விவாகரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்காமல் ஏன் குற்றவாளிகளை காப்பாற்ற துடிக்கிறது என்ற சந்தேகம் அரசியலை கடந்து பொதுவான மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது,இதற்கு ஆண்மை உள்ள எந்த ஊடகமாவது பதில் அளிக்குமா? இல்லை வேடிக்கை பார்க்குமா? என்ற கேள்வி சாமானியன் மனதிலும் தற்போது எழுந்துள்ளது.