Tamilnadu

சிவகங்கையை அதிரவைத்த பாஜகவினர் பதறி போய் ஒப்புதல் கொடுத்த தாசில்தார் மற்ற மாவட்டங்களிலும் போலீஸ் குவிப்பு!

Meppal Sakthi
Meppal Sakthi

தமிழகத்தில் திமுக அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதில் இருந்தே திமுக அரசாங்கம் மத்திய பாஜக அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றையும் மாநில அரசின் திட்டங்களாக மாற்றி தமிழக மக்களுக்கு தெரிவித்து இருப்பதாகவும், மத்திய அரசின் திட்டம் எது என அறிந்து அதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் புதிய திமுக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.


குற்றத்தை உறுதி செய்யும் விதமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் தமிழக திமுக அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டது, இந்நிலையில் மாநில அரசின் அறிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார், முழுக்க முழுக்க அஞ்சலகம் மூலம் செல்வமகள் சேமிப்பு திட்டம் மத்திய அரசு நடத்தி வரும் திட்டம் எனவும் இதனை ஸ்டிக்கர் ஒட்டி மடை மாற்ற முயலுவதாகவும் கண்டனம் எழுந்தது.

இது ஒருபுறம் இருக்க இந்தியா முழுவதும் மத்திய அரசு மாநிலங்களின் நிதி இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கி வருகிறது, இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் மற்றும் நடவடிக்கை ஆனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் பிரதமர் மோடியின் படமின்றி, கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் புகைப்படத்தை வைத்து இது தமிழக அரசின் திட்டம் போல் மக்களிடம் மடை மாற்றி வருகின்றனர்.

இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் சூழலில் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் சிவகங்கையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், பிரதமர் மோடி படமில்லாமல் தடுப்பூசி திட்டத்தை தமிழக அரசு கொடுப்பது போன்ற பேனர் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார், அதில் முழுக்க முழுக்க மத்திய அரசு கொடுக்கும் திட்டத்தில் பாரத பிரதமர் படம் இல்லாமல் பேனர் வைக்கப்பட்டது ஏன்? ஏன் பிரதமர் படம் புறக்கணிக்க படுகிறது என பல்வேறு கேள்விகளை பாஜகவினர் எழுப்பினர்.பாஜகவினர் கேள்விகளுக்கு தாசில்தாரிடம் உரிய பதில் இல்லை, இந்நிலையில் தொலைபேசி மூலம் உயர் அதிகாரிகளிடம் பேசிய தாசில்தார், நாளை முதல் இனி நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பிரதமர் படமும் இருக்கும் எனவும் உறுதி அளித்தார் அதை தொடர்ந்து பாஜகவினர் தங்கள் போராட்டங்களை நிறுத்தினர்.

இது போன்று பல்வேறு மாவட்ட பாஜக தலைவர்களும் தங்கள் பகுதியில் போராட்டம் நடத்தி இது மத்திய அரசின் திட்டம் என்பதை மக்களிடம் கொண்டு சென்றால், கொரோனா காலத்தில் இந்தியாவே தடுப்பூசி கண்டறிந்து, இந்தியர்களை காப்பற்றிய பிரதமருக்கு கிராமம் முதல் நகரம் வரை ஆதரவு பெருகும் என கூறப்படுகிறது.இந்நிலையில் பல மாவட்டங்களிலும் பாஜகவினர் போராட்டம் நடத்தலாம் என்ற தகவலை அடுத்து தற்போது தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களிலும் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது .