தமிழகத்தில் விவாத நிகழ்ச்சிகளில் ஒரு காலத்தில் திராவிட. சிந்தனை உடையவர்கள், கம்யூனிஸ்ட்கள் ஆக்கிரமித்த காலங்கள் இருந்தன, ஆனால் அவை தற்போது அடியோடு மாறியுள்ளது என்றே சொல்லவேண்டும், பாஜக ஆதரவாளர்கள், வலது சாரி, பொருளாதார நிபுணர்கள் என பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் விவாதங்களில் எழுப்பும் கேள்விகளுக்கும், சொல்லும் பதில்களுக்கும் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் பதில் கூற முடியவில்லை.
அந்த வகையில் ஈவேரா பிறந்த தினத்தை சமூகநீதி நாளாக அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின், ஆனால் அன்றைய தினம் ஈவேரா குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன, வளர்ப்பு மகளை சொத்துக்காக திருமணம் செய்தது, தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என கூறியது, கம்யூனிஸ்ட்களை திருடன் என சொன்னது, இந்திய சுதந்திர தினத்தை துக்க தினம் என இழிவு படுத்தியது என பல்வேறு தகவல்கள் ஆதார பூர்வமாக பேசப்பட்டன.
அத்துடன் தலித் மக்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தது, என பல்வேறு தகவல்களை வலதுசாரிய சிந்தனை கொண்ட நபர்கள் விவாதங்களில் தெரிவிக்க பல விவாதங்களில் பெரியாரிஸ்ட் கொள்கை கொண்ட நபர்கள் பதில் சொல்ல முடியாமல் திசை திருப்ப முயன்றது பொதுமக்கள் இடையே சந்தேகத்தை எழுப்பியது.
இந்நிலையில் வடிவேல் திரைப்படத்தில் அடிச்சு தான் பாரேன் என்ற வசனத்தை போல, தமிழக ஊடகவியாளர்கள் விவாத நிகழ்ச்சியில் ஈவேராவை உயர்த்தி பிடிக்க பல்வேறு விதங்களில் தலைப்பை தேர்வு செய்தனர், அதில் முக்கிய தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்று பெரியார் நேற்று இன்று நாளை என விவாத தலைப்பை தேர்வு செய்தது.
விவாதத்தை தம்பி தமிழரசன் தொகுத்து வழங்கினார், அதில் சிறப்பு அழைப்பாளர்கள் நால்வர் கலந்து கொண்டனர் வலதுசாரி சிந்தனையாளர் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டார், அப்போது அவரிடம் தம்பி தமிழரசன் பெரியார் நேற்று இன்று நாளை எப்படி நினைக்கிறீர்கள் என கேட்டார் அதற்கு ஸ்ரீனிவாசன் கொடுத்த பதில் வைரலாகி வருகிறது.
பெரியார் கொள்கைகள் நேற்று இன்று நாளை என்றுமே தோல்வி என வெளுத்து எடுத்து விட்டார் பெரியார் நாத்திகம் என்று கூறினார், ஆனால் இன்று தமிழகத்தில் கடவுளை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக வணங்குகிறார்கள், என்று கூற அதையெல்லாம் தற்போதுள்ள சூழலில் ஒப்பிட முடியுமா என கேட்க வெளுத்து எடுத்துவிட்டார் ஸ்ரீனிவாசன் அதற்கு பதில் சொல்லமுடியாமலும்.. கேள்வி கேட்கமுடியாமலும் தம்பி தமிழரசன் நின்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விவாத வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.