Politics

பிரதமர் வந்து சென்ற நிலையில் மொத்தமாக மாறிய தமிழக களம்..கனவிலும் எதிர்பாராத தலைகீழ் திருப்பம்! தலையில் கைவைத்த திமுக.

pmmodi , mkstalin
pmmodi , mkstalin

தற்போது அடுத்த ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும்  தயாராகி வருகிறது. மேலும் பாஜக தன் தேர்தல் வேலைகளை வேகப்படுத்தி வருகிறது. குறிப்பாக அமித் ஷா கோவை வந்து சென்ற பிறகு தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளார்கள். மாற்று கட்சியினரும் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார்கள்  2026ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்' என, அறிவித்துள்ளார்.இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 


எப்போதும் விமர்சனம் என்ற பெயரில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சித்து வந்த திருமா தற்போது பிரதமரையோ அமித்ஷாவையோ  அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் மதத்தின் மீதான, மதம் போதிக்கிற கருத்துகள் மீதான பார்வை வேறுபடலாம். விமர்சனங்கள் இருக்கலாம். முரண்பாடு இருக்கலாம். இந்து மதத்தை சார்ந்தவர்கள் சங்கடப்படும் வகையில் எந்த கருத்துகளையும் பேசக்கூடாது. இந்து சமூகத்தை சேர்ந்தவர்களை காயப்படுத்தக் கூடாது. அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதில் மட்டும் உறுதியாக இருப்போம். எனவிடுதலை சிறுத்தைகள் தலைவர்  திருமா பேசியது திமுக தலையில் இடியை இறக்கியுள்ளது. 

திருமா ஒருபுறம் இருக்க சீமான் தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை  ஒரே மேடை எறியுள்ளார்கள். பிரதமர் மோடியை சீமான் பாராட்டி பேசி வருகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக சந்தித்தாக தகவல் வெளியாகியது  அதற்கு சீமான் தரப்பிரலிருந்து எந்த ஒரு ரியாக்சனும் இல்லை. மேலும் வக்பு திருத்த சட்டத்தை குறித்து பெரிய அளவில் சீமான் விமர்சிக்கவில்லை. எனவே தமிழக அரசியல் களம் வேறு பாதையை நோக்கி நகர்ந்து வருகிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. 

இதற்கிடையே அமலாக்கத்துறை சோதனை நடத்தும் டி.வி.ஹெச் என்ற தாய் நிறுவனத்தின்கீழ், 50-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் இருக்கின்றன. ரியல் எஸ்டேட், அரிசி உற்பத்தி, எரிசக்தி, தங்கம், சாப்ஃட்வேர் எனப் பல துறைகளிலும் கால் பதித்து நிற்கும் இந்த நிறுவனங்களுக்கு, மூலதனம் டி.வி.ஹெச்-தான் என்கிறார்கள் விவரப்புள்ளிகள். அமைச்சர் கே.என்.நேருவின் நெருங்கிய உறவினர்கள்தான், இந்த நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்களாம். குறிப்பாக, சூரியசக்தி, காற்றாலை பிசினஸில் கடந்த ஆண்டு மட்டும் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறதாம். இவற்றையெல்லாம் தோண்டி எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. 

 தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் நேரு அவரை அமலாக்கத்துறை சுற்றிவளைத்திருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு எதிரான ஒரு கண்டன அறிக்கைகூட வெளியாகவில்லை. முதல்வரின் இந்த சைலன்ட், ரெய்டைவிடவும் கட்சிக்குள் பெரும் விவாதமாகியிருக்கிறது. இதற்கு காரணம் கோபாலபுரம் தான் மத்திய அரசின் அடுத்த டார்கெட். 

‘மேலும் ஆளுநர் மற்றும் அண்ணாமலை கொடுத்த பட்டியலின் அடிப்படையில் தான் இப்போது அமைச்சர்களை டார்கெட் வைத்து செயல்பட தொடங்கி இருக்கிறது அமலாக்கத்துறை. இதுவும் இவ்வளவு சீக்கிரம் ஆரம்பித்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது திமுக அமைச்சர்கள் இடையே தற்போது முக்கியமான மைய கேள்வி, நம்மில் அடுத்த ரெய்டு யாருக்கு என்பதுதான்.அண்ணாமலை ஆளுநர்  கொடுத்த பட்டியல், மத்திய அரசு சேகரித்த பல்வேறு தகவல்கள் அடிப்படையில் அடுத்தடுத்து தமிழக திமுக அமைச்சர்கள் அவர்களது குடும்பத்தினரை நோக்கி மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ரெய்டு அட்டாக்குகளை தொடர்ந்து நடத்தும் என்பது தான் அமைச்சர்கள் தரப்பிலிருந்தே கிடைக்கிற தகவலாக இருக்கிறது