
தி.மு.க-வின் இரும்புத்தூண்’, `மத்திய மண்டலத்தின் போர்ப்படைத் தளபதி’ என்றெல்லாம் தி.மு.க-வினரால் ஏகத்துக்கும் புகழப்படுபவர், தி.மு.க-வின் முதன்மைச் செயலாளரும் சீனியர் அமைச்சருமான கே.என்.நேரு. முதல்வர் ஸ்டாலினின் நிழலாக வலம்வரும் அவரைக் குறிவைத்து சோதனையில் இறங்கியிருக்கிறது அமலாக்கத்துறை. இது தான் தமிழக அரசியலில் பரபர பேசுபொருளாகியிருக்கிறது!
“அமைச்சர் நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோருக்கு.சொந்தமான ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ நிறுவனத்தின் பரிவர்த்தனைகளையெல்லாம் தோண்டத் தொடங்கியிருக்கிறது அமலாக்கத்துறை. அந்தச் சோதனையில், அமைச்சரின் மகனும், பெரம்பலூர் எம்.பி-யுமான அருண் நேருவும் தப்பவில்லை. அவர் இயக்குநராக இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு வந்த பலகோடி ரூபாய் குறித்தும் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக, தன் வீட்டுக்குள்ளேயே அமலாக்கத்துறை புகுந்து சோதனையிடும் என நேரு எதிர்பார்த்திருக்கவில்லை. அதில் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார் அமைச்சர்” என்கிறார்கள் திருச்சி தி.மு.க-வின் சீனியர் தலைக்கட்டுகளே.
நேருவின் வீட்டில் ரெய்டைத் தொடங்கிய அதேநேரத்தில், அவரின் மகனும் பெரம்பலூர் எம்.பி-யுமான அருண் நேருவின் வீடு, நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரது இடங்கள், ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் ரெய்டைத் தொடங்கியது அமலாக்கத்துறை. அமைச்சர் நேருவின் திருச்சி வீட்டில், ஏப்ரல் 7-ம் தேதி காலையில் தொடங்கிய சோதனையை பத்து மணி நேரம் கழித்து நிறைவுசெய்த அதிகாரிகள், ஒரு பெட்டியில் முழுவதும் ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். “இந்தச் சோதனையில் பெரிதாகச் சிக்கியிருப்பது அமைச்சரின் தம்பிகளும் மகனும்தான்” ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ அடைந்திருக்கும் திடீர் வளர்ச்சிக்கான பின்புலத்தை ஆராய்ந்துள்ளது. மேலும், திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் அருகே பெரிய அளவில் நிலங்களை அருண் நேருவின் நிறுவனம் வாங்கிக்குவிப்பதாகக் கிடைத்த புகார் குறித்தும் ஆய்வு செய்துள்ளது அமலாக்கத்துறை.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், பெங்களூரு, மைசூர் மற்றும் பெல்லாரி உள்ளிட்ட பகுதிகளில் கோபாலபுர குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.நேரு குடும்ப நிறுவனத்துக்கும் கோபாலபுர குடும்ப நிறுவனத்துக்கும் இடையே நடந்த முக்கிய டீல்களின் ஆவணங்களை கைப்பற்றியுள்ளது அமலாக்கத்துறை. தமிழகம் முழுவதுமே நிலங்களை வாங்கி குவித்துள்ளார்கள்.விட்டால் தமிழகமே இவர்களின் சொத்தாக மாறிவிடும் அந்த அளவிற்கு சொத்துக்களை வாங்கி உள்ளார்கள். லட்சக்கணக்கான கோடியை தண்டுமாம்...
“ஒரு பக்கம் செந்தில் பாலாஜியின் தலைக்கு மேலே உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் ரத்து வழக்கும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கையும் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாகக் குறிவைக்கப் பட்டிருக்கிறார் அமைச்சர் நேரு. சில மாதங்களுக்கு முன்னர், பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழக ஆளுநர் ரவி, ஆறு தி.மு.க அமைச்சர்களின் பெயர்களைக் கொடுத்துவிட்டு வந்தார். அதில், மூன்றாவது இடத்திலிருந்த நேருவை ‘டிக்’ அடித்திருக்கிறது அமலாக்கத்துறை, மேலும் கோபாலபுரக்குடும்பத்தின் தொடர்புடைய இடங்களை குறிவைத்து தான் ரெய்டுகள் நடந்து வருகிறது.கண்டிப்பாக இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் கோபாலபுரத்தை அமலாக்கத்துறை புயல் மையம் கொள்ளும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
திருச்சியில் ரெய்டில் சந்தோசமாக இருப்பவர் சின்னவர் மற்றும் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் தானம். நேருவோ மகன் வரையில் அமலாக்கத்துறை பாய்ந்ததைத்தான் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோபாலபுரம் மருமகன் தான்‘டார்கெட்’ என்றால்,கோபாலபுரத்திற்கு பக்கம் வண்டியைத் திருப்பியிருக்கலாம். ஆனால், ‘அமைச்சர்கள் செந்தில் பாலாஜி முதல் தலைமையிடம் நெருக்கமானவர்களை கைவைத்தால்தான் கோபாலபுரம் முடங்கும் என ஒவ்வொரு ரைடையும் கண கச்சிதமாக கணக்கு போட்டு அடித்திருக்கிறது அமலாக்கத்துறை. அதில்தான், சற்றுப் பதற்றமாகிவிட்டது கோபாலபுரம்.
அமலாக்கத்துறை சோதனையால் தி.மு.க-வுக்குள் பெரும் புயல்தான் கிளம்பியிருக்கிறது. அமைச்சர் நேரு பதற்றமாவது ஒருபுறமிருக்க, ‘அடுத்தது யாரோ..?’ என சீனியர் அமைச்சர்கள் பலருமே கிலியடைந்திருக்கிறார்கள். ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் முடக்கப்பட்டால், அமலாக்கத்துறை வேகமெடுத்தால் அடுத்து என்ன செய்வது..?’ என நேருவின் குடும்பத்தினரும் கோபாலபுரம் மிரட்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.