Tamilnadu

"தமிழ் புத்தாண்டை மாற்ற நீங்கள் யார்? நீங்கள் உலக தமிழர்களின் தலைவரா? உடனே பதில் தேவை வெளுத்து எடுத்த முன்னாள் ஆய்வாளர்!

stallin
stallin

தமிழ் புத்தாண்டை மாற்றி திமுக அரசாங்கம் சட்ட திருத்தம் செய்ய ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்பி இருப்பதாகவும் அதனை ஆளுநர் ஏற்று கொள்ளாமல் மேலும் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது முன்னாள் காவல் ஆய்வாளர் ஜெபமணி மோகன்ராஜ் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பல்வேறு கோவில் நிலங்களை மீட்டவரும் சமூகம் சார்ந்த பல்வேறு விவாகரங்களுக்கு நீதிமன்றம் மூலம் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் ஜெபமணி மோகன்ராஜ் ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருபவர் இவர் முன்னாள் காவல்துறை அதிகாரியாவார்  இவரது தந்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவர்.



இந்த சூழலில் இவர் தமிழ் புத்தாண்டு மாற்றம் செய்யும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அவர் அனுப்பிய கடிதத்தில்..தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்தில் இருந்து தை மாதமாக மாற்ற உங்களுக்கு எத்தனை வேண்டுகோள் வந்துள்ளது உடனடியாக பதில் தேவை,தமிழ் தாய் வாழ்த்தை மாற்றுவது தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றுவது என வெட்டியாக விடியல் காட்டாமல், உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூடி நல்ல முடிவு எடுங்கள் என வெளுத்து எடுத்து உள்ளார். 

நீங்கள் ஒன்றும் உலக தமிழர்களுக்கு தலைவர் இல்லை, தமிழ் புத்தாண்டை மாற்ற கூடிய தகுதியும் உங்களுக்கு இல்லை என அடித்து கூறி இருக்கிறார் ஜெபமணி மோகன்ராஜ், இந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது, தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றி தமிழர்களின் அடையாளத்தை திமுக அரசு நிறுத்தி கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் எப்போதும் தங்கள் மாநில மொழி மற்றும் வருட பிறப்பு விவகாரத்தில் தடை செய்தது இல்லை, இன்று தமிழ் புத்தாண்டை மாற்றுவது அதன் பிறகு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி தினத்தில் போனஸ் வழங்குவதை மாற்றி ஏதேனும் ஒரு தினத்தில் வழங்குவது என வேலையை அரசு செய்யும் என்பதால் கடும் அதிருப்தியை மக்கள் வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.