ரஜினிகாந்தையும் ஆன்மீகமும் என்றுமே பிரிக்க முடியாத ஒன்று. அந்த வகையில் தனது திரைப்படம் ஒவ்வொன்றும் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக இமயமலை சென்று வழிபட்டு வருவது ரஜினிகாந்த் பழக்கம் ஆனால் கொரோனா காலகட்டத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் அவரால் எந்த ஒரு ஆன்மீக பயணத்தையும் தொடர முடியாத காரணத்தினால் தற்போது ஜெய்லர் படத்தின் ரிலீசுக்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ஆன்மீகப் பயணத்தை தொடர்ந்து உள்ளார்.
இந்த பயணம் இன்னும் நீண்டு உள்ளது. இதுவரை அவர் மேற்கொண்ட ஆன்மீக பயணங்களில் இதுவே நீண்ட பயணமாக கருதப்படுகிறது முதலில் இமய மலைக்கு சென்று தனது பயணத்தை தொடர்ந்த ரஜினிகாந்த் ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை போன்ற இடங்களுக்கு சென்ற பிறகு ஜார்கண்ட் மாநிலம் சென்ற சூப்பர் ஸ்டார் அம்மாநில ஆளுநரை சந்தித்து உரையாடி உள்ளார். அதற்கு பிறகு உத்திரப்பிரதேசம் சென்று உத்திரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி பின் நிறைய விஷயங்களை உரையாடியுள்ளார்.
அதோடு அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு சென்று ராமரை வழிபட்டு வந்துள்ளார். ஆன்மீகப் பயணத்தின் போது சூப்பர் ஸ்டார் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றுமே சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருப்பதற்கு பின்னணியில் மிகப்பெரிய அரசியல் காரணம் ஒன்று இருப்பதாகவும் அதற்காகவே ரஜினிகாந்தின் தற்போது இந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனவும் சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதாவது தற்போது பாஜகவை ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டும் என்பதற்காக மத்தியில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று இணைந்து இந்தியா என்ற கூட்டணியை அமைத்துள்ளனர். இந்த கூட்டணியில் ஆரம்பத்தில் சரிவர ஒத்துழைப்புகள் இல்லாமலும் பிரச்சனைகள் மட்டுமே எழுந்து வந்த சமயத்தில் மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்த இந்தியா கூட்டணி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தொடுத்து பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்து விளக்கம் அளிக்க வைத்தது.
இதனால் நேரடியாகவே தம்மை எதிர்க்கும் ஒரு கூட்டணியை இனி விட்டு விடக்கூடாது என்பதற்காகவும் இந்தியா கூட்டணியில் இருக்கும் சில முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் திருப்பவும் பாஜக பல வேலைகளில் ஈடுபட்டு வருவதாக டெல்லி வட்டாரங்களில் தகவல் கசிந்தது.
தற்போது அந்த எதிர்க்கட்சி கூட்டணியில் முக்கிய தலைவர்களாக இருப்பவர்கள் சரத் பவார், நிதீஷ் குமார் மற்றும் அகிலேஷ் யாதவ் இவர்களில் சரத் பவரை எப்படியாவது இந்தியா கூட்டணியில் இருந்து பிரிக்க வேண்டும் என்று எந்த திட்டம் போட்டாலும் அவர் அந்த கூட்டணியை விட்டு நகர்வதாக இப்போதைக்கு தெரியவில்லை என்ற நிலையில் உள்ளனர். அதேசமயத்தில் தற்போது நிதீஷ் குமார் மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற விதத்தில் இருப்பதால் அவர்களை குறி வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும், இவ்விருவர்களில் அகிலேஷ் யாதவை தங்கள் பக்கம் திருப்புவதற்காக சூப்பர் ஸ்டாரை தூது அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் அரசியல் நகர்வுக்காக தான் ரஜினிகாந்த் இமயமலை சென்றதும், அங்கிருந்து திரும்பியதுடன் அரசியல் புள்ளிகளை சந்தித்தார் என கூறப்படுகிறது. இன்னும் 10 மாதகாலம் கூட முழுதாக இல்லாத நேரத்தில் ரஜினிகாந்த் எடுக்கும் அரசியல் நகர்வுகள் மற்றும் சந்திப்புகள் அனைத்தும் இந்தியா கூட்டணியின் கணக்குகளை உடைக்கும் என சில மூத்த அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.