சுதந்திர தினவிழா அன்று கைது செய்யப்பட்ட கனல் கண்ணன் சரியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் நேரத்தில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்து இருக்கிறார், ஸ்ரீரங்கம் கோவில் எதிரே இருக்கும் பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக கருத்து கூறியதாக தமிழக காவல்துறை புதுவை வரை சென்று கனல் கண்ணனை கைது செய்தது.
தொடர்ச்சியாக கனல் கண்ணனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது ஆச்சர்யத்தை அளித்தது, இது ஒருபுறம் என்றால் கனல் கண்ணனை சிறையில் வைத்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டி செயல்பட்ட நபர்களுக்கு, சிறையில் இருந்து வெளிவந்த அன்றே கனல் கண்ணன் அதிரடி காட்டி இருக்கிறார்.
கனல் கண்ணனை வரவேற்க இந்து முன்னணி அமைப்பினர் புழல் சிறை வாசலில் குவிந்து இருந்தனர், வெளியில் வந்த கனல் கண்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, செய்தியாளர்களை சந்தித்த கனல் கண்ணன், இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி எனவும் வரும் காலங்களில் இந்துக்களாக செயல்படுவேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வார்த்தை கனல் கண்ணனை சிறையில் தள்ளியாக வேண்டும் என ஒற்றை காலில் நின்றவர்களுக்காக கடும் அதிர்ச்சியை அளித்தது, சிறையில் வைத்தால் இனி கனல் கண்ணன் இந்துக்களுக்கு ஆதரவாக பேசமாட்டார் என நினைத்தால் கனல் கண்ணனோ இந்துக்களாக சிறை சென்றது மகிழ்ச்சி என குறிப்பிட்டு இருக்கிறார்.
சிறையில் இருந்து மனம் மாறுவார் என்று பார்த்தால் இன்னும் தீவிரமாக களத்தில் செயல்பட போகிறார் என கனல் கண்ணனின் முதல் பேட்டியே உறுதி செய்துள்ளது, இந்த சூழலில் கனல் கண்ணன் தனது நிபந்தனை ஜாமின் முடிந்ததும் தீவிரமாக மாநிலம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
எப்போவாவது அரசியல் இந்துக்கள் விழிப்புணர்வு பேசிய கனல் கண்ணனை பெரியாரிஸ்ட்கள் இப்போது தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்ற வைத்து விட்டார்கள் என்று கனல் கண்ணனின் பேட்டியை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மொத்தத்தில் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்த கனல் கண்ணன் இனி நிஜ வாழ்விலும் மாஸ்டராக வலம் வர இருக்கிறார்.