Politics

விவேகானந்தர் தேடிய இளைஞன் !!

விவேகானந்தர் தேடிய இளைஞன் !!
விவேகானந்தர் தேடிய இளைஞன் !!

கர்நாடக இளைஞர்களால் ரோல் மாடலாக கொண்டாடப்படுபவர் திரு.தேஜஸ்வி சூர்யா அவர்கள். அவரைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்..


16 நவம்பர் 1990ல் சூர்யநாராயணா மற்றும் ரமா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். சிக்மளூரு இவரது பிறந்த ஊர்.சிறுவயது முதலே படிப்பில் படுசுட்டியாய் திகழ்ந்தார்..இவரது செயல்பாடுகள் மற்றும் சமூக அக்கறையான பேச்சுகள் பெங்களூர் மக்களை கவர்ந்தது..

ஓவியங்கள் வரைவது தேஜஸ்விக்கு பொழுதுபோக்கு. இவரது ஓவியங்கள் பல பெரிதும் பாராட்டப்பட்டன.( சத்தியமா தீதி அக்கா ட்ராயிங் மாதிரி இல்லீங்கோவ்)தனது 14வது வயதில் தன்னுடைய ஓவியங்களை விற்று கார்கில் நிதி உதவியாக அனுப்பி வைத்தார். இது இந்தியாவையே இவர் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது.

கல்லூரியில் பயிலும் போதே ABVP யில் தன்னை இணைத்துக் கொண்டு சமூக சேவை செய்தார்..கல்லூரி படிப்பு முடித்து பெங்களூர் இன்ஸ்டியூட் ஆப் லீகல் ஸ்டடீஸ் இல் சட்டம் பயின்றார்.2016 வரை ABVPயில் செக்ரட்டரியாக தொடர்ந்தார்.2017ல் பிரிட்டிஷ் ஹை கமிசன் இவரை Uk young leadership program,ல் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற அழைத்தது.

தேஜஸ்வி கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வருகிறார்.Arise India எனும் அமைப்பை ஏற்படுத்தி சமூக சேவையும் செய்து வருகிறார்.2016ம் வருடம்BJYM ல் இணைந்தார்.2017 ல் ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தக்சின கன்னடா மாவட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

படுகொலையை கண்டித்து மங்களுரில் தேஜஸ்வி நடத்திய "சலோ ரேலி" நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.2019 ல் நடந்த ஜெனரல் எலக்சனில் பிஜேபி சார்பாக போட்டியிட்டு...காங்கிரஸ் வேட்பாளர் b.k ஹரிபிரசாத்தை மூணரை லட்சம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் வென்றார். 

இளம் வயது Mp யாக பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்..பாராளுமன்றத்தில் இவர் கேட்கும் கேள்விகளுக்கு பயந்தே திமுக எம்பிக்கள் பாராளுமன்றம் பக்கம் போவதே இல்லை.தேஜஸ்வி சூர்யா மீது மகிளா காங்கிரஸ் பெண் உறுப்பினர் ஒருவர் பொய்யாக பாலியல் தொல்லை கொடுத்தார் தேஜஸ்வி என ட்வீட் போட..காங்கிரஸ் வெகுண்டு எழுந்து பொய்பிரச்சாரம் செய்ய...

தேஜஸ்வி நேரடியாக எதிர் கொண்டு நீதிமன்றம் சென்றார்.அதற்குள்ளாகவே பொய் ட்வீட் போட்ட காங்கிரஸ் பெண்மணி தேஜஸ்வியை சந்தித்து மன்னிப்பு கோர  பிரச்சினை சுமூகமாக முடிந்தது.மூக்குடைக்கப்பட்ட காங்கிரஸ் இன்னும் தேஜஸ்வி போட்ட ட்வீட்டுகளை ஐன்ஸ்டீன் போல ஆராய்ச்சி செய்து வருகிறது.. அந்தோ பரிதாபம்.!!

Mp ஆன பிறகும் இவரது செயல்பாடுகள் மக்கள் மெச்சும் அளவுக்கு இருக்கிறது..அதற்கு எடுத்துக்காட்டாக தனியார் மருத்துவமனையில் நடக்கும்ஆக்ஸிஜன் படுக்கை ஊழலை தற்போது வெளிக்கொண்டு வந்துள்ளார்.

விவேகானந்தர் கேட்ட நூறு இளைஞர்களில் ஒருவர் தேஜஸ்வி சூர்யா என கர்நாடக மக்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்..நாமும் அவரை வாழ்த்துவோம். இந்தியாவின் எதிர் காலம் இவரைப்போன்ற இளைஞர்களிடமே உள்ளது. 

#பீமா