மம்தாவின் மரண ஆட்டம் எப்படி தொடங்கிய அரசியல் வாழ்கை எப்படி வந்து நிற்கிறது !!மம்தாவின் மரண ஆட்டம் எப்படி தொடங்கிய அரசியல் வாழ்கை எப்படி வந்து நிற்கிறது !!
மம்தாவின் மரண ஆட்டம் எப்படி தொடங்கிய அரசியல் வாழ்கை எப்படி வந்து நிற்கிறது !!

1955 ஜனவரி 5ல் கொல்கத்தா அஸ்ரா எனும் ஊரில் பிறந்தவர் மம்தா பானர்ஜி.டோகேஷ் சந்திரா சௌதூரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.அரசியல் நாட்டம் காரணமாக 1970 களில் காங்கிரஸில் சேர்ந்தார். அவரது வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. 1976களில் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற காலங்களில் கம்யூனிஸ்ட்டுகளின் ரத்தவெறி உச்சத்தில் இருந்தது.

கம்யூனிஸ்ட்டுகள் தங்களை எதிர்த்தவர்களை தாக்கியும் கொலை செய்தும் அதிகாரப் பசியில் பொதுமக்களையும் கொடுமைக்குள்ளாக்கினர்.

(ஆனால் இதே பார்முலாவை தற்போது மம்தாவும் நடைமுறைப்படுத்துகிறார்.)கம்யூனிஸ்ட்டுகளின் அதிகார துஷ்பிரயோகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சாமானிய மக்களை நெருங்கினார் மம்தா.

1984 நடந்த தேர்தல் மம்தாவை மாபெரும்  அரசியல் சக்தியாக அடையாளம் காட்டியது.ஆம் யாராலும் நினைத்து பார்க்க முடியாத வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோம்நாத் சட்டர்ஜியை தோற்கடித்து முதல்முறையாக பாராளுமன்றத்தில் நுழைந்தார். சிறுவயதிலேயே நாடாளுமன்ற பெண் உறுப்பினராக நுழைந்தவர் எனும் பெருமையை தக்கவைத்துக் கொண்டார். 

அதன்பிறகு அரசியலில் மம்தாவுக்கு ஏறுமுகமே. வரிசையாக 1991 மற்றும்1997ல் நடந்த தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றார்.காங்கிரஸில் இருந்தால் தனக்கு எதிர்காலம் இருக்காது என்பதை உணர்ந்த தீதி 1997ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கினார்.

1999களில் பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர் கொண்டார். பெரும்பாலான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.பிஜேபி ஆட்சியில் ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பேற்றார்.

இந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் குண்டர்களால் மம்தாவின் வீடு அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.திரிணாமுல் தொண்டர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.வாஜ்பாய் அவர்கள் மம்தாவுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பளித்தார்.1999 ஆம் ஆண்டு காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தார்.காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் ரயில்வே துறை அமைச்சர் பதவி வகித்தார்.

2011 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தார்.2011 மே 20 அன்று முதலமைச்சர் பதவி அவரை தேடி வந்தது.கூடவே மமதையும் அகங்காரமும் ஒட்டிக் கொண்டது..அரசியலில் ஓட்டுவங்கிக்காக கம்யூனிஸ்ட்டும் காங்கிரசும் தங்களுக்கென ஒரு பாதை வகுத்திருக்க....மம்தாவோ.. தனக்கென ஒரு பாணியை வகுத்தார்..!

ஆம் அதுதான் அகதிகளை அரவணைப்பது என்ற போர்வை..!அகதிகளாக வந்த பங்களாதேஷ் ரோஹிங்யாக்களை துருப்புச்சீட்டாக பயன்படுத்த ஆரம்பித்தார்.அவர்களுக்கு குடியுரிமை கொடுத்து தனது கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இந்த வகையான அரசியலை கம்யூனிஸ்ட்டுகளே எதிர்பார்க்கவில்லை. ரோஹிங்யா அகதிகள் மம்தாவின் ஆட்சியில் தான் சாரைசாரையாக நுழைய ஆரம்பித்தனர். அவர்களை கொண்டே கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் காரியகர்த்தாக்களை வேட்டையாட ஆரம்பித்தார்.

அரசியல் சதுரங்கம் ஒரு புறம் இருக்க தனது சொந்த மருமகனை வைத்துகுறுக்குவழியில் சொத்துகள் வாங்கி குவிக்க ஆரம்பித்தார்.அதில் முக்கியமான இரண்டு நிலக்கரி கடத்தல் மற்றும் சாரதா சிட்பண்ட் வழக்கு.

2014 ல் நாரதா நியூஸ் சேனல் ஒரு ஸ்டிங் ஆப்பரேஷனை நடத்தியது.அந்த நிரூபர் தன்னை ஒரு என்ஆர்ஐ என்றும் வெஸ்ட் பெங்காலில் முதலீடு செய்ய விருப்பப்படுவதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.அவர் சந்தித்த அந்த நபர்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் செல்வாக்கு மிகுந்த நபர்கள்.

ஆம்.. அவர்கள் திரிணாமுல் காங்கிரசை சார்ந்த நான்கு அமைச்சர்கள் ஏழு எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு காவல்துறை உயர் அதிகாரி..

ஒரு ரகசிய இடத்தில் சந்திப்பு நடந்தேறியது... அந்த ரிப்போட்டர் சந்திப்பில் நடந்த ரகசிய பேச்சுகள் பரிமாற்றம் எல்லாவற்றையும் தன்னுடைய வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டார்.

2016 சட்டமன்ற தேர்தலின் போது நாரதா செய்தி நிறுவனம் 52 மணிநேரம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டது.அந்த வீடியோவில் யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எவ்வளவு கமிஷன் என பல பகீர் பேச்சுகள் இடம்பெற்றிருந்தது.

சிபிஐ இந்த வழக்கை தாமதமாக விசாரிக்க ஆரம்பித்தது.2020ம் ஆண்டு கவர்னர் ஜக்தீப் தங்கார் உத்தரவின் பேரில் பிர்ஹாத் ஹக்கீம் சுப்ரதா முகர்ஜி மதன்மித்ரா மற்றும் சோகன் சட்டர்ஜி ஆகியோர் பெயரில் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

இங்கு தான் மம்தாவின் மருமகனும் எம்பியுமான அசோக் பானர்ஜியின் திருவிளையாடல் ஆரம்பித்தது.. இதோடு நில்லாமல் சாரதா சிட்பண்ட் நிலக்கரி கடத்தல் என தனது கைங்கர்யங்களை மம்தாவின் ஆசியுடன் நடத்த ஆரம்பித்தார்.

நிலக்கரி கடத்தல் மாபியாவில் முக்கிய குற்றவாளியான லாலா என அழைக்கப்படும் அனுப் முகர்ஜி அப்ரூவர் ஆனார். இந்த வழக்கும் கவர்னர் உத்தரவின் பெயரில் சிபிஐ விசாரணை செய்ய ஆரம்பித்தது.

கோல்பீல்டு லிமிடட் எனும் நிறுவனங்கள் மூலம் அதன் அதிகாரிகளை பணத்தில் குளிப்பாட்டி சகலவசதிகளையும் செய்து கொடுத்து நிலக்கரி கடத்தலை கனகச்சிதமாக செயல்படுத்தினார் லாலா. இதன் மூளையாக செயல்பட்டது சாட்சாத் மம்தாவின் மருமகனின் மனைவி மற்றும் அவரது சகோதரி..

லாலா பணப்பரிவர்த்தனையை அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருச்சிரா மற்றும் மைத்துனி மேனகா காம்பிர் இருவரின் தாய்லாந்து வங்கிகணக்கில் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக நடத்திவந்துள்ளார்.

இன்னமும் சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன.நடைபெற்ற நடைபெறும் ஊழல்கள் எல்லாமே மம்தாவின் ஆசியுடனேயே நடைபெறுகிறது.மம்தாவிற்க்கு பணப்பசி அதிகாரப்பசி எல்லையற்று போய்விட்டது.அதற்கு சான்று அவருக்கு எதிராக செயல்படும் யாராக இருந்தாலும் கட்சி பேதமின்றி அழித்தொழிப்பார்.

கடந்த 10 வருடங்களில் ஆயிரக்கணக்கான மாற்று கட்சி காரியாகர்த்தாக்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதே சான்று.மம்தாவின் ஆணவமே சிபிஐயையே நேற்று மிரட்டும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. நான் என்ற அகம்பாவம் கொண்ட யாரும் நிலைத்ததில்லை.. காலம் எப்போதும் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்காது. காலம் தக்க பதில் சொல்லும் அக்காவுக்கு.

written by - #பீமா


Share at :

Recent posts

View all posts

Reach out