தமிழகத்தில் நகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பெருவாரியான இடத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பாக அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளது. நகராட்சி, பேரூராட்சி என 13 கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
இது ஒருபுறம் என்றால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் இதர பகுதிகளில் வாக்கு பதிவின் போது நடைபெற்ற சம்பவங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை அளித்தன, பல பூத்களில் திமுகவினர் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் சம்பவமும் அரங்கேறின.
இந்த வீடியோ காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி ஆளுநர் மற்றும் நீதிபதிகள் பார்வைக்கும் சென்றது மேலும் பல்வேறு புகார்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன, இதில் எந்த புகாரிலும் சைலேந்திரபாபு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்துறையிலேயே அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம் முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்த, இதன் பின்னணி அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது,ஜெயக்குமார் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட திமுக பிரமுகர் மீது இரண்டு வழக்குகளில் பிடி வாராண்ட் பிறப்பிக்கப்பட்டும் அவரை காவல்துறை கைது செய்யாதது தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லை எனவும் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அதனை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சூழலில் சட்டம் ஒழுங்கு டிஜிபி நகர்புற தேர்தல் முடிவுகளில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு விதிமீறல் சம்பவங்கள் குறித்து கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும்..,
இது குறித்து முதல்வரை சந்தித்து கலந்தாலோசனை செய்ய இருப்பதாகவும், அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஜெயலலிதா காலத்தில் ஆளும் கட்சியினர் தலையீடு இருந்தால் எது போன்ற நடவடிக்கை எடுப்பாரோ அதே போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சைலேந்திரபாபு கூற இருப்பதாக கூறப்படுகிறது.
அதில் முழுமையான தீர்வு எட்டப்படும் என நம்புவதாகவும் அப்படி இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது, ஏற்கனவே குழந்தைகள் நல ஆணையம் லாவண்யா விவகாரத்தில் டிஜிபியிடம் அறிக்கை கேட்டுள்ளது மேலும் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் விஷயத்திலும் மத்திய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் விரைவில் இது குறித்து டிஜிபி விளக்கம் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தவிர்த்து உள்துறை அமைச்சகத்திற்கும் வழக்கமாக மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபி கொடுக்கும் அறிக்கையில் மாற்றங்கள் உண்டாகலாம் என்ற பேச்சும் அடிப்படுவதால் விரைவில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரடையலாம் என்று கூறப்படுகிறது.
More Watch videos