Tamilnadu

"கொத்தடிமை" என நினைத்த திமுகவினர் பத்திரிகையாளர்கள் கொடுத்த பதிலடி உண்மை என்ன?

DMK journalists
DMK journalists

பத்திரிகையாளர் கொடுத்த பதிலடி என சமூகவலைத்தளத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது அது பின்வருமாறு :-பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்பட்ட முதல் நாளில் பத்திரிக்கையாளர்களுக்கு  அறிவாலயத்தில்  ஏற்பட்ட அவலநிலை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக  வேட்பாளர்கள்  அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலை முன்பு  பிரத்யேகமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


அண்ணா கலைஞர் சிலைக்கு முன்பு நின்று கொண்டுமுதல்வர் ஸ்டாலின் நீண்ட நெடிய வரிசையில் நின்று வரும் வெற்றிபெற்ற வேட்பாளரை சந்தித்து அவர்களிடமிருந்து புத்தகம் மற்றும் வேட்டியை பெற்றுக் கொள்கிறார்.

பலர் வயது வித்தியாசமின்றி ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெறுகின்றனர் இந்நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நான்கைந்து மணி நேரம் நின்று கொண்டே வெற்றி பெற்ற வேட்பாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிகழ்ச்சியில்  செய்தி சேகரிக்க வந்த  பத்திரிக்கையாளர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் கேமராமேன்கள் ஆகியோர் அமர்வதற்கு  இருக்கைகள் கொடுக்கப்பட்டது.



இன்று  காலையில் முதலமைச்சர் நின்று கொண்டிருந்த போது பத்திரிக்கையாளர்கள் தங்கள் கால் மீது கால் போட்டு உட்கார்ந்து கொண்டு இருந்ததால் அவருக்கு அவமரியாதை ஏற்பட்டு விட்டதாம்.எனவே, தற்போது  மாலையில்  நடக்கும் நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட இருக்கைகளை எடுத்துவிட்டனர்.

முதலமைச்சர் முன்பு பத்திரிகையாளர்கள் அமர கூடாதா?இதுதான் பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் அரசா? நலவாரியம் அமைக்கப்பட்ட முதல் நாளில் பத்திரிக்கையாளர்களுக்கு  அறிவாலயத்தில்  ஏற்பட்ட அவலநிலை.?

ஸ்டாலினே நிற்கிறார் நீங்கள் என்ன உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் நாற்காலிகளை எடுத்துவிட்டனர். இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பதிலடியாக நிகழ்ழ்சி ஆரம்பித்ததும் நிருபர்கள், கேமராமேன்கள் கேமராவை ஆன் செய்து வைத்துவிட்டு பக்கத்தில் உள்ள கட்டடத்தில் உள்ள படிகட்டில் போய் அமர்ந்துவிட்டனர்.

கலைஞர் டிவி, கேமராமேன், சில யூடியூபர் சானல் ஆட்கள் தவிர யாரையும் காணாமல் கேமரா மட்டும் ஓடிக்கொண்டிருப்பதைப்பார்த்து பிஎஸ் ஓக்கள், போலீஸார், அதிகாரிகள் கையைப்பிசைந்துக்கொண்டிருக்கின்றனர்.எழுதியவர் -வி.எம். சுப்பையா

இது குறித்து எந்த முக்கிய ஊடகங்களும் வாய் திறக்காத சூழலில் இதன் உண்மை தன்மை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More Watch Videos