Politics

#BREAKING அங்கீகாரம் ரத்து திமுகவிற்கு அடிமேல் அடி போட்டு கொடுத்த நபர் சிக்கினார்!!!

#BREAKING  அங்கீகாரம் ரத்து திமுகவிற்கு  அடிமேல் அடி போட்டு கொடுத்த நபர் சிக்கினார்!!!
#BREAKING அங்கீகாரம் ரத்து திமுகவிற்கு அடிமேல் அடி போட்டு கொடுத்த நபர் சிக்கினார்!!!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான பொறியியல், மருத்துவம், கலை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அவருக்கு சொந்தமான வீடுகளில் காலை 11 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை காந்தி சிலை முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். நேற்றிரவு எ.வ.வேலுக்கு சொந்தமான தனியார் கல்லூரிக்குள் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்த ஸ்டாலின் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு பிரசார மேடைக்கு சென்றார். அவர் பிரச்சாரத்துக்கு சென்ற உடன் வருமான வரித்துறையினர் கல்லூரிக்குள் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 18  இடங்களில் இந்த சோதனை  ஒரே நேரத்தில் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது, சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம், கணக்கு விபரங்கள் ஆகியவை கைப்பற்ற பட்டுள்ளன எனவும் இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தபட்டது போன்று திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்டாலின் வருகையின் போது எம வேலு மூலம் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், சொந்த கட்சி வேட்பாளர்கள் என அனைவருக்கும் கொடுக்க இருந்த பணத்தை மொத்தமாக கல்லூரியில் வைத்து பிரித்து கொடுக்க இருந்ததாகவும், இதை திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள நபர் ஒருவர் நேரடியாக தொடர்பு கொண்டு பாஜக தலைவர்களுக்கு தகவலை கூறியதாகவும் அதன் அடிப்படையில் பணம் கைமாற இருந்த நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சீட் கிடைக்காத விரக்தியில் திமுகவினரே ரகசிய தகவலை போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது, இதற்கு முன்னர் திமுக சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தேர்தல் வருகிறது யாரும் யாரையும் வருமான வரிதுறையிடம் போட்டு கொடுக்க கூடாது என திமுகவினரை சத்தியம் செய்ய சொல்லியது குறிப்பிடத்தக்கது.