ஜெய்பீம் திரைப்படத்தை சூர்யா தயாரித்து நடித்து இருந்தார் இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கிய நிலையில் வன்னியர்களை தவறாக உருவகப்படுத்துவதாக சர்ச்சை வெடித்தது.
இந்த சூழலில் பாமக இளைஞர் அணி செயலாளரும் எம்பி-யுமான அன்புமணி நடிகர் சூர்யாவிற்கு ஜெய்பீம் திரைப்படம் குறித்து 9 கேள்விகளை பக்குவமாக நாகரீகமாக எழுப்பி இருந்தார், உண்மைக்கு புறம்பாக ஏன் காட்சிகளை அமைத்தீர்கள் வன்னியர்களின் அக்கினி கலசத்தை ஏன் தவறாக பயணப்படுத்துனீர்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
ஆனால் அன்புமணி எழுப்பிய எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் அளிக்காத சூர்யா தான் திரைப்படம் எடுத்தது சரி என்பது போலவும், அன்புமணியின் புரிதல்தான் தவறு என்பது போலவும், நான் நாடு முழுவதும் தெரிந்த நடிகன் எனக்கு விளம்பரம் தேவையில்லை எனவும் சூர்யா அறிக்கை வெளியிட்டு இருப்பது கடும் அதிருப்தியை உண்டாக்கிய சூழலில்.,
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும் அவர் எந்த குழுவால் ஆட்டுவிக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டது பின்வருமாறு :- அர்ஜுன் சம்பத் அறிக்கை!
நடிகர் சூர்யா கொடுத்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை! வழக்கறிஞர் சந்துரு அவர்களின் பெயரை அதே பெயரில் படத்தின் கதாநாயகன் பாத்திரத்திற்கு வைத்துள்ள நீங்கள்! போலீஸ் அதிகாரி பெருமாள்சாமி பெயரை அதே பாத்திரத்திற்கு வைத்துள்ள நீங்கள் ஏன் ஆரோக்கியசாமி என்கிற உண்மையான பெயரை குரு என்று மாற்றினீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.
பசப்பு வார்த்தைகளால் பதில் கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. அவர் அர்பன் நக்சல் குழுவினரால் சூழப்பட்டு உள்ளார்.தலித்திய சாதிவெறி அரசியல் நடத்தும் கிறிஸ்தவ மிஷனரிகள்,இடதுசாரிகள் மற்றும் திராவிட இயக்க சிந்தனைகளாலும் சூரிய கவரப்பட்டு உள்ளார் என்பது மட்டுமே உண்மை.
ஜெய்பீம் படத்தில் ஜாதிய வன்மத்தை தூண்டும் வகையில் அமைக்கப் பட்டுள்ள காட்சிகளை மாற்றி அமைப்பதே இதற்கு நிரந்தர தீர்வு. உண்மை சம்பவத்தை வெளிபடுத்தும் படத்தில் வில்லன் பாத்திரத்துக்கு ஏன் பெயரை மாற்றுகிறீர்கள் என்று கேட்டால் தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிடவில்லை என்கிறார் நடிகர் சூர்யா. இந்த ஏமாற்று வேலைக்குப் பெயர் எளிய மக்களுக்கான போராட்டமாம் என குறிப்பிட்டுள்ளார் அர்ஜுன் சம்பத்.
சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் போல தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையும் சர்ச்சைகளை வளர்த்து கொண்டே செல்கிறது.