Tamilnadu

பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கு வருகிறது அடுத்த ஆப்பு...! வேற லெவல்..!

pm modi
pm modi

உலகிலேயே டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகம் நடைபெறும் நாடு நமது இந்தியாதான் வளர்ந்த பொருளாதார வல்லரசு நாடுகளை மிஞ்சி முதலிடம் பிடித்துள்ளது இந்தியா. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட UPI முறைதான். இந்த முறையை பயன்படுத்தி Paytm, googlepay, phonepe உள்ளிட்ட செயலிகள் செயல்படுகின்றன.


இந்த சூழலில் இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் பரிவர்த்தனை 90% சதவிகிதத்தை அடையும் என்று எதிர்பார்க்க படுகிறது. இது குறித்து பெரியசாமி தங்கவேல் என்ற ஆசிரியர் தெரிவித்த சில முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு :- ஊசிமணி பாசி கூட பணம் இல்லா முறையில் (paytm)  விற்கப்படும் உண்மையான டிஜிட்டல் இந்தியா.



சேலத்திற்கு அருகில் உள்ள புத்திர கவுண்டம்பாளையம்  சென்ற வாரம் திறக்கப்பட்ட உலகிலேயே பெரிய முருகன் கோவிலில் ஒரு தள்ளுவண்டி கடையில் ஊசிமணி பாசி விற்பவர்கள் Paytm மூலம் ஊசிமணி பாசிமணி விற்பனை செய்து  கொண்டிருந்தார்கள். இதுதான் உண்மையான சமூக மாற்றம். 

யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்றுவேன் என்று ஏழு வருடங்களுக்கு முன்னால் கூறிய நரேந்திர தாமோதர்தாஸ் மோடி அவர்கள் இன்று செய்து காட்டியுள்ளார் என்பதில் யாருக்காவது சந்தேகம் உள்ளதா??

வெறும் ஏழு வருடங்களில் இது எப்படி சாத்தியமானது?  உலகிலேயே அதிகமான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் இந்தியாவில்  நடக்கிறது என்பதை பார்க்கும் பொழுது உண்மையில் பிரமிப்பாக உள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவில் அனைத்து பணபரிவர்த்தனை களும் டிஜிட்டல் முறையில் மட்டுமே நடக்கும் மீண்டுமொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை வந்து 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு மிக அதிகமான மதிப்புள்ள 100 ரூபாய் மட்டுமே என்ற நிலை வரும்.

சொன்னது போல் கருப்பு பணத்தையும் ஒழித்துவிட்டு தான் இந்த மனிதர் ஓய்வு எடுப்பார் என்ற நம்பிக்கை இந்தியர்களுக்கு மிக அதிகமாக உள்ளது. அதனால் தான் அவர் தொடர்ச்சியாக வென்று கொண்டிருக்கிறார். எதிர்கால சந்ததியினருக்கு மிக அருமையான இந்தியாவை கொடுப்பதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கும் இவரின் ஆட்சிக் காலமே இந்தியாவின் பொற்காலம் என்று பொன் எழுத்துக்களில் எதிர்காலத்தில் பொறிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை குறிப்பிட்ட அளவை எட்டும் நிலையில் மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுப்பார் என்றும் அது பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பண மூட்டைகளுக்கு மிக பெரிய அடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் பண வீக்கம் அதிகரித்து வரும் சூழலில் எப்போது வேண்டுமானாலும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என ஒரு கருத்து நிலவுவதால் பண பதுக்கல் முதலைகள் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்களாம்.