Tamilnadu

அடுத்த இடியாய் இறங்கிய செய்தி இந்த "விளக்கு" போட்டால் அபராதமாம் கடும் கண்டனம் தெரிவிக்கும் வியாபாரிகள்!

eb office
eb office

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு இந்து வணிகர் சங்க தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்  பண்டிகை காலங்களில் வியாபார நிறுவனங்களை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே  கொரானா பரவல் ஊரடங்கு காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வியாபாரிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏதாவது வியாபாரம் நடக்கும் என்று வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தங்கள் தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.

இந்நிலையில் மின்வாரியத்த்தின் மேற்கண்ட அறிவிப்பு வியாபாரிகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வேற்று மத பண்டிகைகளின் போது அமைதியாக இருக்கும் மின் வாரியம் தீபாவளி பண்டிகைக்கு மட்டும் இது போன்ற அறிவிப்பை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

எனவே மின் வாரியம் உடனடியாக இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று இந்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என இந்து வணிகர் சங்க தலைவர்  வி பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்த சம்பவமே இந்துக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில்  தற்போது வியாபாரிகள் வண்ண விளக்கு பயன்படுத்தினால் அபராதம் என தெரிவித்து இருக்கும் சம்பவம் அடுத்த இடியாய் இறங்கியுள்ளது.இதுதான் விடியலா என்ற கேள்வியே இப்போது அதிகரித்து காணப்படுகிறது.