சமீப காலமாக சூர்யா குடும்பத்தினர் நடித்து வெளிவரும் படங்கள் திரையில் வெளியாகிறதோ இல்லையோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது கூடவே தற்போது வெளிவரும் சூர்யா திரைப்படத்தை சுற்றி அரசியலும் வந்துவிடுகிறது, அதற்கு காரணம் சூர்யா குடும்பத்தினரின் சமீப கால அரசியல் பேச்சுக்கள்..,இந்த சூழலில் தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஜெய் பீம் இந்தப்படத்தில் தொடக்கம் முதலே அரசியல் தொற்றிகொண்டது காரணம் உண்மை கதையை மையமாக கொண்ட திரைப்படம் என்பதால்,
1990களில் கடலூர் மாவட்டத்தில், கம்மாபுரம் என்ற காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடலை திருச்சி மாவட்ட எல்லையில் போலீசார் தூக்கி எறிந்து, ராஜா கண்ணு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்தனர்.
ராஜா கண்ணுவின் மனைவி பார்வதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சந்துரு, வக்கீலாக பணி செய்த போது இந்த வழக்கிற்காக சட்டப் போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தார்.
இந்த வழக்கை மையமாக வைத்து சினிமாவுக்காக சில புனைவு காட்சிகளுடன் இந்த ஜெய் பீம் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் இந்த படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியான சூழலில் படத்தில் ஒரு இடத்தில் வரும் காட்சியில் பிரகாஷ் ராஜ் சேட்டு ஒருவரை விசாரணை செய்யும் போது அவர் இந்தியில் பதில் அளிக்க பிரகாஷ் ராஜ் அறைந்து தமிழில் பேசு என்று சொல்லும்படி தமிழிலும், தெலுங்கில் சொல்லு என தெலுங்கிலும் காட்சி அமைத்து இருக்கிறார்கள்.
அதுவே இந்தியில் உண்மையை சொல்லு என மாற்றி வெளியிட்டு இருக்கிறார்கள், இந்தக்காட்சியை பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர், இதற்கு முன்னர் அகரம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா அதில் பேசுகையில், மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள் என கேட்டு இருந்தார்.
அதை சுட்டிக்காட்டிய விமர்சகர்கள் என்ன சூர்யா உங்கள் படத்தில் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வார்த்தையை மாற்றிப்போட்டு மக்களை திசை திருப்புகிறீர்கள், உங்கள் படம் ஓடவேண்டும் என்றால் இந்தி மொழி தேவை, குழந்தைகள் பயில வேண்டும் என்றால் எதிர்பீர்களா எனவும் கிண்டல் அடித்து வருகின்றனர். இப்படி ஒரே திரைப்படத்தில் ஒரே காட்சியில் வசனங்களை மாற்றி சிக்கி கொண்டீர்களே சூர்யா இது தான் உங்கள் நேர்மையா எனவும் விமர்சனங்கள் வருகின்றன. அந்த காட்சியை பார்க்க கிளிக் செய்யவும்.