Tamilnadu

கோவில் கதவை மூடிய அதிகாரி ..வெளுத்து எடுத்த பக்தர்கள் தமிழகத்தில் மாற்றம் தொடங்கியது !

temple special
temple special

தமிழகத்தில் இந்து பண்டிகைகளுக்கும் , வழிபாட்டிற்கும் தொடர்ந்து  தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் ஆயுத பூஜை விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களை அனுமதிக்க கூடாது என்பதற்காக தமிழக அரசு தொடர்ந்து வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டிற்கு தடை விதித்ததாக பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர் .


டாஸ்மாக் தியேட்டரை திறக்க அனுமதி அளித்த திமுக அரசாங்கம் தொடர்ந்து பக்தர்களை புறக்கணித்து வருவதாகவும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஆலய வழிபாட்டிற்கு பல்வேறு தடைகளை தமிழக அரசு விதித்து வருவதாகவும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன . மேலும் இந்து ஆலயங்களில் தவிர்த்து மற்ற மத வழிபட்டு தளங்களை கொரோன நடவடிக்கைக்கு உட்படுத்தவில்லை அங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றவில்லை என.,

இந்து முன்னணி ,இந்துமக்கள் கட்சி ,இந்து தமிழர் கட்சி ஆகியவை குற்றம் சுமத்தி வந்தன. இந்த சூழலில் இணையத்தில் படு வேகமாக பக்தர் ஒருவர் கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகளை நோக்கி எழுப்பும் கேள்வி , மிக வேகமாக பலராலும் பகிரப்பட்டு வருகிறது அதில் பக்தர்களை உள்ளே வரக்கூடாது  வெளியில் இருந்துகூட சாமி கும்பிட அனுமதி அளிக்காதது ஏன் ? 

அரசாங்கம் கோவிலை பூட்ட  வேண்டும் என எங்கு சொன்னது , சர்ச்களில் ஞாயிற்று கிழமை எத்தனை பக்தர்கள் வருகிறார்கள் என தெரியுமா ? அங்கெல்லாம் கேள்வி எழுப்பாமல் எங்களை வரக்கூடாது என சொல்வது ஏன் என சரமாரியாக கேள்வி எழுப்பினார் .,அதை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டனர் ,

அருகில் இருந்த நபர் இந்த உரையாடலை செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட இந்த வீடியோ காட்சி பரவி வருகிறது ,இது ஒருவரின் மனக்குமுறல் இல்லை இது போல் பல பக்தர்கள் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக கொந்தளிப்பில் உள்ளனர் என்றும்  ஆயுத பூஜை ,அதை தொடர்ந்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கும் தடை தொடர்ந்தால் மிக பெரிய அளவில் போராட்டம் வெடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது . விடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் .