சிறுபான்மை மக்கள் நல கட்சி தலைவர் பேராயர் R. சாம் ஏசுதாஸ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை இரண்டுவாரத்திற்கு முன்னர் அளித்திருந்தார் அதில், "இந்த வாரம் ருத்திரதாண்டவம் என்ற திரைப்படத்தின் டைலர் வெளியானது அதை பார்த்தபோது அதில் தமிழகத்தில் மதக்கலவரத்தையும், ஜாதி மோதல்களையும் தூண்டும் விதமாக பல காட்சிகளும், வசனங்களும் படமாக்கப்பட்டுள்ளது எனவும் ,
இந்த திரைப்படம் இப்படியே வெளியாகும் என்றால் , அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகம் மதக்கலவரத்தை தூண்டி மக்களிடம் பிரச்சனை ஏற்படுத்திவிடும், இந்தியாவிலும் மதக்கலவரத்தை தூண்ட சில பாசிச சக்திகள் திரைப்படத்துறையை பயன்படுத்துவதை அரசு அரம்ப நிலையில் தடுத்திட வேண்டும்.எனவே இந்த திரைப்படம் உடனே தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசை சிறுபான்மை மக்கள் நல கட்சி வேண்டுகோள் வைக்கிறது.
இந்த திரைப்படத்தில் சில வசனங்கள் சிறுபான்மை கிறிஸ்துவர்களை அச்சுறுத்தும் படியாகவும், கொச்சைப்படுத்தும் படியாகவும், கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் படியாகவும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இதை சரியாக தணிக்கை செய்யப்பட வேண்டும்.கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக பேசப்படும் வசனங்கள், காட்சிகள் நீக்கப்பட வேண்டும். இப்படி மதக் கலவரத்தை தூண்டும்படியாக யார், எந்த படம் எடுத்தாலும் அதை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். தடை செய்ய வேண்டும்.
அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மதமாற்றம் என்ற பொய்யால் தமிழகத்தில் ஒரு மதக்கலவரத்தை தூண்ட படமெடுக்கும் இந்த மோகன் ஜி இப்படத்தின் இயக்குநர் உடனே கைது செய்யப்பட வேண்டும்எனவும் தெரிவித்து இருந்தார் ,இந்த சூழலில் தனியார் யூடூப் சணல் சேனல் விசனிற்கு நேர்காணல் ஒன்றை சாம் யேசுதாஸ் கொடுத்து இருந்தார் ,இதனை அசோக் என்ற நெறியாளர் நேர்காணல் செய்து இருந்தார் .
இருவருக்கும் இடையே தொடக்கத்தில் அமைதியாக சென்ற நேர்காணல் ஒரு கட்டத்தில் காரசாரமாக மாறியது , தமிழகத்தில் மதம் மாறிவிட்டு எத்தனை நபர்கள் இன்றும் பழைய சாதியின் அடிப்படையில் பயனை அனுபவிக்கிறார்கள் உண்மையா இல்லையா ? சாத்தான் என யாரும் சொல்வது இல்லையா ? சொன்னது மோகன் சி லாசரஸ் , உண்மையை தானே மோகன் தனது திரைப்படத்தில் காட்டியுள்ளார் இதில் என்ன தவறு இருக்கிறது என வெளுத்து எடுத்துவிட்டார் .
ருத்ரதாண்டவம் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் ,இயக்குனர் மோகன் ஜி யை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்த பேராயர் நேர்காணலில் வரிக்கு வரி சாத்தன் என பேசியவர்களை கைது செய்யுங்கள் என பேசும் நிலைக்கு நேர்காணல் முடிந்துள்ளது , இயக்குனர் மோகனை கைது செய்யவேண்டும் என புகார் கொடுத்த பேராயர் இறுதியில் சொந்த சமுகத்தை சேர்ந்தவர்களை கைது செய்யவேண்டும் என பேசியிருப்பது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .
கேள்விகளை நேர்மையாக முன்வைத்த இளம் பத்திரிக்கையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன விவாதத்தின் வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் .