கனல் கண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள சூழலில் தற்போது அவருக்கு முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை போன்றே ஜாமின் மனுவும் கைது செய்யப்பட்டது இந்து முன்னணி அமைப்பினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த சூழலில் கனல் கண்ணன் கைதிற்கு பதிலடி கொடுக்க இந்து முன்னணி அமைப்பு முடிவு செய்துள்ளது, சென்னை, மதுரவாயலில், இந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய, சினிமா ஸ்டன்ட் மாஸ்டரும், இந்து முன்னணி கலை இலக்கியப் பிரிவு தலைவருமான கனல் கண்ணன், 'ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலின் எதிரே, கடவுளே இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது.
'அது என்று உடைக்கப்படுகிறதோ, அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்' என்றார். இதற்காக, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனல் கண்ணனின் பேச்சு, கோவில்களின் முன்பு கடவுள் மறுப்பு வாசகங்களுடன், பெரியார் சிலை இருக்கலாமா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள, பெரியார் சிலைக்கு கீழே, 'கடவுள் இல்லை இல்லை; இல்லவே இல்லை' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.கோவிலுக்கு முன்பு இப்படிப்பட்ட வாசகங்களுடன் பெரியார் சிலை இருப்பது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் திட்டமிட்ட செயல் என, பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பெரியார் சிலைகளுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களுக்கு பதிலடியாக, 'கடவுள் இருக்கிறார்; கடவுளை வணங்காதவன் முட்டாள்; கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி; கடவுளை வணங்காதவன் அயோக்கியன்' என்ற வாசகங்களுடன், தமிழகம் முழுதும், கொடி கம்பங்களை அமைக்க, இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த-1994-ல் சென்னை, கோமளீஸ்வரன்பேட்டையில், 'கடவுள் இருக்கிறார், கடவுளை வணங்காதவன் முட்டாள்' போன்ற வாசகங்களுடன் இந்து முன்னணி கொடி கம்பத்தை, ராமகோபாலன் திறந்து வைத்தார். அதைப் பின்பற்றி, தமிழகம் முழுதும், இந்து முன்னணி கொடி கம்பங்கள் அமைக்கப்படும்' என்றனர்.
மொத்தத்தில் பெரியாரிஸ்ட்கள் எந்த வசனத்தை வைத்து விமர்சனம் செய்தார்களோ அதே பாணியில் பதிலடி கொடுக்க இந்து முன்னணி தயாராகி இருப்பது பெரியாரிஸ்ட்கள் அமைப்புகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.