Cinema

நடிகை "மீனா" காதல் குறித்த கேள்வி வெளுத்து எடுத்த கார்ட்டூனிஸ்ட் பாலா!

Thirumavalan ,meena, Cartoonist bala
Thirumavalan ,meena, Cartoonist bala

தமிழகத்தில் ஊடக துறையில் பணியாற்றும் சிலர் எழுப்பும் கேள்விகள் பல நேரங்களில் மக்களுக்கு தீர்வு கொடுப்பதற்கு பதில் தனிப்பட்ட மனிதர்களுக்கு மிக பெரிய வலியை கொடுத்து விடுகின்றன, இந்த சூழலில் சமீபத்தில் தனியார் ஊடகத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் விசிக தலைவர் திருமாவளவனை நோக்கி நடிகை ஒருவரை காதலித்தீர்களா என எழுப்பிய கேள்வி சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.


நடிகை மீனாவை திருமாவளவன் காதலித்தீர்களா? என திருமாவளவனை நோக்கி கேள்வி எழுப்பினார் முக்தார் அதற்கு திருமாவளவன் இல்லை என மறுத்து விட்டார் இருப்பினும் கணவரை இழந்து துக்கத்தில் இருக்கும் நடிகை மீனா இந்த கேள்வியால் என்ன மன ரீதியிலான அழுத்தம் பெற்று இருப்பார் என பல கேள்விகள் எழுந்தது.

இந்த சூழலில்தான் கார்ட்டூனிஸ்ட் பாலா நடிகை மீனா குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் முக்தாரை கடுமையாக கண்டித்து இருக்கிறார், இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு : 

அசிங்கமாக இருக்கிறது முக்தார்.திருமா அவர்களிடம் கேள்வி கேட்பதற்கும் உரையாடுவதற்கும் எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன.. 

அவரது திருமணம் குறித்து கேட்பது அநாகரிகம் அப்படியே கேட்பதாக இருந்தால் போகிறப்போக்கில் ஒரு கேள்வியாக கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டிய விசயம்.

திருமா அவர்களும் நாகரிகம் கருதி அந்த கேள்விக்கு ஒரு பதிலை சொல்லிவிட்டு கடந்து போகிறார்.. ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் செக்கு மாடு மாதிரி அங்கேயே சுற்றி வருகிறீர்கள், அதில் சம்பந்தமே இல்லாமல் ஒரு நடிகை குறித்த  கிசு கிசுவை  கேள்வியாக கேட்டு அதையும் தலைப்பாக வைத்து உங்கள் அழுகிப்போன தக்காளியை விற்க துடிக்கிறீர்கள்.

ஒரு நடிகை எனில் பொதுவெளியில் எது வேண்டுமானாலும் கேட்க முடியுமா.. கணவரை இழந்து குழந்தையுடன் நிற்கும் அந்த பெண்ணுக்கு இது எத்தனை மன வேதனையை கொடுக்கும்.. அந்த இடத்தில் நம் வீட்டுப் பெண்களை வைத்துப் பார்த்திருந்தால் இந்த கேள்வி கேட்கும் எண்ணம் வருமா..

இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் குறித்து கூட ஏகப்பட்ட கிசி கிசு இருக்கிறது  அவர்களிடம் இதுபோல் கேட்க முடியுமா உங்களால் என வெளுத்து எடுத்து இருக்கிறார் பாலா.