Tamilnadu

திமுக ஆளுநர் மீது பாய்வதற்கான காரணம் வெளியானது !!! அறிக்கையே அனுப்பிவிட்டார் ஆளுநர் !

stallin and rn ravi
stallin and rn ravi

திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலி தமிழக ஆளுநர் ஆர்என்ரவி மீது கடுமையாக சாடியுள்ளது, உருட்டல் மிரட்டல் எல்லாம் இங்கு செல்லாது எனவும் ஆளுநர் பெரியண்ணன் மன பான்மையில் நடந்துகொண்டால் இது தமிழகம் நாகலாந்து இல்லை எனவும் விரிவான கடிதத்தை எழுதியுள்ளது முரசொலி இதன் மூலம் நேற்றைய தினமே நாம் TNNEWS24 -ல் வெளியிட்ட தகவல் உண்மை என தெரியவந்துள்ளது.


நேற்றைய தினம் நமது TNNEWS24 YOUTUBE பக்கத்தில் பதவி விலகவேண்டும் என  தெரிவித்த திமுகவிற்கு ஆப்பு வைத்த ஆளுநர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம் அதனை கீழே இணைய்துள்ளோம். இந்த சூழலில் இன்று முரசொலியில் நீட் மற்றும் இரு மொழி கொள்கையை முன்வைத்து ஆளுநரை விமர்சனம் செய்துள்ளது திமுக.

ஆனால் இன்று திமுக பத்திரிக்கை முரசொலி ஆளுநர் மீது பாய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மதமாற்றம் போன்றவை பள்ளி கல்லூரி, தொண்டு நிறுவனங்களில் அதிக அளவில் நடைபெறுவதாக அறிக்கை அனுப்பி இருக்கிறார்.  தொடக்கத்தில் மாணவி தற்கொலை குறித்து, பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவிடம், அண்ணாமலை ஆலோசித்தபோது, மாநில அளவில் போராட்டங்களை நடத்துமாறு கூறியிருக்கிறார்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து, மத்திய உள்துறைக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பிய அறிக்கையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சிறுபான்மை நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், குறிப்பாக மதமாற்ற நடவடிக்கைகள் வேகம் எடுத்திருப்பதாக கூறியிருக்கிறார்இதையடுத்தே தேசியம அளவில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் நட்டா என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மத குற்றவாளிகள் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என ஆளுநர் தெரிவித்ததில் தொடங்கி தற்போது லாவண்யா விவகாரம் வரை ஆளுநர் அனுப்பிய அறிக்கைகள் திமுகவிற்கு கடும் சிக்கலை உண்டாக்கி இருப்பதால் ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்து திமுக முரசொலியில் கடிதம் எழுதியுள்ளாதம்.

Tnnews24 நேற்றே வெளியிட்ட வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.