தஞ்சை பள்ளி மாணவி மதமாற்ற அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் புகார் அளித்து இருக்கின்றனர், தமிழக காவல்துறை மாணவி தற்கொலையில் மதமாற்ற புகார் இல்லை, விடுதி காப்பாளர் நடத்திய கொடுமையே காரணம் என கூறி வருகிறது.
மாணவி தற்கொலை விவகாரத்தில் முழுமையான சிபிஐ விசாரணை தேவை எனவும் மாநில காவல்துறை விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் மத மாற்றம் காரணமாக மாணவி உயிர் இழந்து இருக்கிறார் என குற்றசாட்டு போராட்டம் ஆர்ப்பாட்டம் என நடத்தி வருகிறது பாஜக.
இந்த சூழலில் சவுக்கு என்ற அடைமொழி கொண்ட முன்னாள் அரசு ஊழியர் சங்கர், லாவண்யா மரணம் குறித்து தனது நண்பர் உடன் நேர்காணல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார், அதில் லாவண்யா விவகாரத்தை அருகில் இருந்து பார்த்தது போல கதை கதையாக அடித்துவிட்டுள்ளார்.
லாவண்யாவிற்கும் கைது செய்யப்பட்டுள்ள ஹாஸ்டல் வார்டன் சகாய மேரிக்கும் இடையே லவ் இருக்கிறது எனவும் அடித்துவிட்டுள்ளார் சங்கர், இந்த சூழலில் சவுக்கு சங்கரின் மனிதாபிமானமற்ற செயலை பலரும் விமர்சனம் செய்து வரும் சூழலில் நெட்டிசன்கள் சவுக்கு சங்கரின் கதையை ட்ரோல் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இனி சவுக்கு சங்கரல்ல புளுகுணி சங்கர் எனவும் நெட்டிசன்கள் கிண்டல் அடிக்க தொடங்கியுள்ளனர் வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.