
தமிழக அரசு கோவில் நிலத்தை வேறு ஒரு அரசு நிறுவனத்திற்கு கையக படுத்த இருப்பதாகவும் அதனை உடனடியாக தடை செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என கோவில்களை காக்க போராடிவரும் ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டு கோள் பின்வருமாறு :- மீண்டும் கோவில் சொத்து கொள்ளை - தடுப்பது உங்கள் கையில்,நாகப்பட்டினம் நரிமணம் கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் புஞ்சை நிலத்தை சட்டவிரோதமாக தமிழக அரசு சென்னை பெட்ரோலியம் கார்பரேஷனுக்காக கையகப்படுத்த முயல்கிறது.
எப்படி வீரசோழபுரத்திற்கு உங்கள் எதிர்ப்பை பதிவு செய்தீர்களோ அதே போல இதற்கும் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவும். எதிர்ப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி commr.hrce@tn.gov.in, toursec@tn.gov.in, indsec@tn.gov.in, dicnmp@tn.gov.in. இதன் நகலை Nagapattinam@NamKovil.in என்கிற என் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
இது திரும்பப் பெறப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும். அதற்கு உங்கள் எதிர்ப்பு கடிதங்கள் உதவும். காசு பணம் கேட்கவில்லை. தெருவிலே வந்து போராடு என்று சொல்லவில்லை. வீட்டிலிருந்தபடியே உங்கள் எதிர்ப்பை ஒரு மின்னஞ்சல் மூலமாக செலவில்லாமல் பதிவிட்டு அதன் நகலை எனக்கு கொடுக்க கேட்கிறேன்.
செய்வீர்களா என்று கேள்வி எழுப்பியதுடன் மாதிரி கடிதத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதிரி கடிதம்:-
தமிழக அரசு தொழிதுறை வெளியிட்ட ந.க. எண் 7807/2020/சிபிசிஎல் 06.05.2021 தேதியிட்ட விளம்பரம் கண்டேன்.இந்த விளம்பரத்தில் நாகப்பட்டினம் நரிமணம் கிராம், 52ஆம் வட்டம் அலகு மூணில் அமைந்துள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஸ்வாமி கோவில் மற்றும் ஸ்ரீ ஸ்ரீனிவாசபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 2.37 ஹெக்டேர் புஞ்சை நிலத்தை கையகப்படுத்துவதாகவும் இதற்கான எதிர்ப்புகள் இருப்பின் தெரிவிக்குமாறும் வெளியிடப்பட்டிருந்தது.
இது முற்றிலும் சட்டவிரோத செயல் ஆகையால் இதை முழுவதுமாக எதிர்த்து என்னுடைய கடும் ஆக்ஷேபணத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 6(15)ன் அடிப்படையில் இந்த கோவிலின் நலனில் அக்கறை உள்ள நபர் என்கிற அடிப்படையில் என்னுடைய கடும் எதிர்ப்பை பதிவிடுகிறேன்
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பாதுகாக்க சட்டப்பிரிவு 34 உள்ளது. இந்த பிரிவிற்கு முற்றிலும் முரணான இந்த அறிவிப்பு/விளம்பரம் சட்டவிரோதமானதாகையால் இதை உடனுக்குடன் திரும்பப்பெற்று, திரும்பபெறப்பட்டது என்பதனை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யவேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.