Politics

கொரானா தடுப்பூசி குறித்து மாற்றி மாற்றி கூறுவது ஏன்..!?? காங்கிரஸ் இரட்டை வேடம் அம்பலம்!!

கொரானா தடுப்பூசி குறித்து மாற்றி மாற்றி கூறுவது ஏன்..!?? காங்கிரஸ் இரட்டை வேடம் அம்பலம்!!
கொரானா தடுப்பூசி குறித்து மாற்றி மாற்றி கூறுவது ஏன்..!?? காங்கிரஸ் இரட்டை வேடம் அம்பலம்!!

சீனாவில் உருவாக்கப்பட்டு உலகையே ஸ்தம்பிக்கச் செய்த கொரானா வைரஸ் உலக பொருளாதாரத்தை சிதைத்தது மட்டுமல்லாமல் மக்களை வேட்டையாடி தன் கோரப்பசிக்கு இரையாக்குகிறது.


இந்த சீனவைரஸின் கொடுமையைவிட பெருங்கொடுமை,அப்பாவி  மக்களை மரணிக்க  வைத்து அவர்களின் பிணங்களின் மேல் நின்று அரசியல் செய்யும் காங்கிரஸ், திமுக போன்ற எதிர்கட்சிகள்..உலகில் எந்த மூலையிலும் எந்த தேசத்திலும் கேட்டறிந்திடாத கேவலமான எதிர்கட்சி அரசியல் நம் பாரத நாட்டில் மட்டுமே அரங்கேறுகிறது..

சீன வைரஸின் முதல் அலையின் போதே உலகநாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டன..ஆனாலும் பல பெரியநாடுகளே கண்டறிய முடியாமல் தோற்றுப்போனது.. ஆனால் நம் பாரத தேசம் கோவி ஷீல்டு கோவாக்சின் எனும் தடுப்பூசி மருந்துகளை கண்டறிந்தது மட்டுமல்லாமல் பல உயிர்காக்கும் மருந்துகளை வரைமுறைப்படுத்தியது..

இந்தியாவில் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தயாரிக்கப்பட்ட பின்இந்தியாவில் உள்ள பல முஸ்லீம் மௌலானா, மௌலவிகள் தடுப்பூசியை "ஹலால் சர்டிபிகேட் இல்லாமல் நாங்கள் போட்டுக் கொள்ள முடியாது" என வீண்விவாதங்களை முன்வைத்தனர்.

சில மாதங்கள் பற்றி இப்படியே விவாதம் செய்து, அலிகார் யுனிவர்சிடியின் இஸ்லாம் மதத்தை சார்ந்த பேராசிரியர்கள் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை. இன்று அந்த பேராசிரியர்கள் பலர் மரணமடைந்தது வருந்ததக்க விஷயம்.தூண்டிவிட்டு அழகு பார்த்த காங்கிரஸ் நேரடியாக மக்களை பயமுறுத்த கிளம்பியது..காங்கிரஸ் கட்சியின் மனீஷ் திவாரி,  "மோடி இந்திய மக்களை கினி பிக் ஆக பயன்படுத்துகிறார்" என்றார்.

சத்தீஷ்கரின் சுகாதாரத்துறை அமைச்சர் ஒருபடி மேலே போய் "இதை சத்தீஷ்கருக்குள் அனுமதிக்கமாட்டோம் எனக்கு தடுப்பூசிகள் மீது நம்பிக்கை இல்லை" என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.News24 தொலைக்காட்சி செய்தியாளர், சந்தீப் சௌத்ரி ஒரு நேர்முக காணலில், பா.ஜ.க. தலைவரை பார்த்து, "நீங்கள் பா.ஜ.க. வினர்  நம்பிக் கொள்ளுங்கள்..நான் போட்டுக் கொள்ளப் போவதில்லை ஏனெனில் *நீங்கள் தயாரித்த தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கை இல்லை"என்றார்.

 ஆம் ஆத்மி கட்சியின் IT Cell தலைவர் அங்கித் லால் ட்விட்டரில், தடுப்பூசியை கிண்டல் செய்தும்,ராகவ் சட்டா. "மோடிக்கு தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு போட வேண்டும் என்பதில் இத்தனை அவசரம் என்ன* என்று அறிவற்றவர் போல கேள்வி கேட்டார்.காங்கிரஸின் தலைவர் ஆச்சார்யா ப்ரமோத் கிருஷ்ணன் தடுப்பூசியை கிண்டல் செய்து, "இது போலி தடுப்பூசி" என்று எழுதினார்.

கம்யூனிஸ்ட் கார்டூனிஸ்ட்டான சதீஸ் ஆச்சார்யா,இந்திய தடுப்பூசியைப் பற்றி கீழ் தரமான கார்டூன் வரைந்து அது "நீரும் க்ளூகோஸூம் கலந்த தண்ணீர்" என்றார்.சமாஜ்வாதி காங்கிரஸின் தலைவர், உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவ், "இது பா.ஜ.க. ஊசி என்றும் அதை எப்போதும் நான் போட்டுக் கொள்ளமாட்டேன்* என்றார்.

இப்படி இவர்கள் மக்களின் மனதில் தடுப்பூசி பற்றி எதிர்மறை எண்ணங்களை வளர்த்துவிட்டு, இது சரியான நல்ல தடுப்பூசி என்றால்...... மோடி ஏன் போட்டு கொள்ளவில்லை என கொக்கரித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் தடுப்பூசி பற்றிய தவறான கருத்துகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் பேச தவறியதே இல்லை.

எந்த மருந்திற்கும் காலக்கெடு உண்டு. இந்த எதிர்மறை கருத்துக்களால் மக்கள் ஊசி போட்டுக் கொள்ளாமல் தடுப்பூசிகள் லட்சக்கணக்கில் வீணாகின. மருந்துகளை வீணடித்த மாநிலங்களில் தமிழகம் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது.

இக்காலக் கட்டத்தில் தான், மோடி தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு அனுப்பினார். இரண்டாம் அலையின்போது நட்புநாடுகள் செய்நன்றி மறவாது நமக்கு உதவுகின்றன.நம் நாட்டின் எதிர் கட்சிகள் எத்தனை கீழ்தரமானவை என்பதற்கு இவர்களின் பேச்சுக்களே சான்று.... 

இப்போது கேட்கிறார்கள் மோடி நமக்கு ஏன் தடுப்பூசி கொடுக்கவில்லை என்று.இவர்களின் பேச்சை நம்பி ஏமாந்த மக்கள் கொத்து கொத்தாக மரணிக்கின்றனர்..ரஷ்யாவிலோ அமெரிக்காவிலோ ஏன் சீனாவில் கூட எதர்கட்சிகள் இவ்வளவு தரம்தாழ்ந்து பிண அரசியல் செய்யத்துணியவில்லை.ஆனால் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் மோடி எதிர்ப்பு என்ற ஒரே காரணத்திற்காக மக்களை கொன்று அதைவைத்து அரசியல் ஆதாயம் தேடுவது மிகவும் வேதனைக்குரியது என பொதுமக்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

.........உங்கள் பீமா