Tamilnadu

விஷயம் நினைத்ததை விட பெரிசு போலயே..! உடைந்தாலும் ஆச்சர்யம் இல்லை !

mullai periyaru
mullai periyaru

முல்லை பெரியார் அணையில் கேரள அமைச்சர் நுழைந்து தண்ணீரை திறந்த விவகாரம் நினைத்ததை காட்டிலும் மிக பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தமிழக அரசிற்கு அடிமேல் அடி விழும் வண்ணம் இந்த முறை மெகா அரசியலை பாஜக கையில் எடுத்துள்ள நிலையில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறும் என்ற தகவல் ஆளும் திமுக கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிக்கு வேட்டு வைத்துள்ளன.


முல்லை பெரியார் அணை முழுக்க முழுக்க தமிழக அரசிற்கு சொந்தமானது அணை பாதுகாப்பு, பராமரிப்பு என அனைத்துமே தமிழகத்திற்கு சொந்தமானது கேரளாவிற்கு முல்லை பெரியாறு அணையை பொறுத்தமட்டில் எந்த அதிகாரமும் இல்லை, இந்த சூழலில் தான் கேரள அமைச்சர் தமிழக எல்லையில் கால் வைத்த விவகாரம் தமிழக விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், இடுக்கி மாவட்ட கலெக்டர் சிபா ஜார்ஜ், பீர்மேடு எம்.எல்.ஏ. வாலூர் சசோமன் மற்றும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்று அணையின் பகுதிகளைப் பார்வையிட்டு கேரள போலீசாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர். அதன்பிறகு கேரள மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி காலை 7 மணி அளவில் அணைப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் அம்மாநில அதிகாரிகள் பெரியாறு அணையில் 3 மற்றும் 4வது மதகைத் திறந்து தண்ணீரை உபரியாக வெளியேற்றினர். மொத்தம் உள்ள 13 மதகுகளில் இரண்டு மதகுகள் வழியாக வினாடிக்கு 34 கன அடி நீர் திறக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் 139.50 அடி வரை தேக்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டு, 29ஆம் தேதி காலை 138.70 அடியை எட்டியிருந்தபோதே தண்ணீர் திறக்கப்பட்டது கண்டு தமிழ்நாடு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுவே கர்நாடகவிலோ அல்லது வேறு மாநிலத்திற்கு சொந்தமான இடத்திலோ தமிழக அமைச்சர்களை விடுங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று இருந்தால் கூட மாநிலம் பற்றி கொண்டு எரிந்து இருக்கும் அப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டு மாநில உரிமையை கேரளாவிடம் இழந்துவிட்டு நமது அணையில் கேரள அமைச்சர் ஒருவர் அதிலும் முல்லை பெரியாறு அணையை இடிக்கவேண்டும் என பேசிவரும் ஒருவர் அணையின் நீரை திறந்தது தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது.

இந்த சூழலில்தான் நேரடியாக தேனிக்கு செல்லவும், விவசாய சங்கங்கள் அமைப்புகள் பொதுமக்கள் உடன் மிக பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்து வருகிறார், வழக்கமாக தேசிய கட்சியான பாஜக இரு மாநில விவகாரங்களில் முதலில் களம் இறங்காது ஆனால் இந்த முறை கம்யூனிஸ்ட் அரசிடம் உரிமையை இழந்த திராவிட திமுக அரசு என்ற ரீதியில் வலுவான பிரச்சாரத்தை மாநில உரிமையை நோக்கி களம் இறங்க போகிறதாம் பாஜக.

பாஜக 8 ம் தேதி முல்லை பெரியாரு அணையில் கேரள அமைச்சர் வந்து விதி மீறளில் ஈடுபட்ட சம்பவத்தையும் அதை தொடர்ந்து 9- ம் தேதி அதிமுக சார்பில் மிக பெரிய ஆர்ப்பாட்டம் தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் நடத்த இருக்கிறது, இந்த சூழலில்தான்.,

விஷயம் நினைத்ததை காட்டிலும் வேறு பாதையில் செல்கிறது விவசாயிகள் பிரச்னையில் பாஜக அதிமுக இரண்டு கட்சிகளும் கை கோர்தால் அது இரு மாநில பிரச்னையாக வெடிக்கலாம் எனவும், அது ஆளும் கட்சிக்கு மிக பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என உளவுத்துறை கண்டறிந்து மேலிடத்திற்கு தகவல் கொடுத்துள்ளது.

இதையடுத்து அவசர அவசரமாக தமிழக நீர் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளை அழைத்து கொண்டு தேனி விரைந்துள்ளார், இப்படி விவகாரம் எல்லை மீறி கொண்டு இருக்க மாநில உரிமையை மீட்க போகிறோம் என அண்ணாமலை களம் இறங்கினால், அது ஆளும் திமுக அரசிற்கு கடும் பின்விளைவுகளை உண்டாக்கும் என கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்துடன் நீர் பிரச்சனை என்றால் பாஜக மீது பழியை போட்டு எளிதாக தப்பித்து கொள்ளலாம் என்றால், பிரச்சனை திமுக கூட்டணி கட்சியான  கம்யூனிஸ்ட் ஆளும் கேரள மாநிலத்துடன் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் அதிர்ச்சியில் மூழ்கி இருக்கிறதாம் ஆளும் தரப்பு.வருகின்ற 8 மற்றும் 9ம் தேதிகளில் தேனியில் நடைபெற போகும் ஆர்ப்பாட்டம் திமுக அரசின் முதல் பல பரீட்சை எனலாம்.

இது போன்ற முக்கியமான அரசியல் நகர்வுகள், எந்த ஊடகங்களிலும் வராத அரசியல் கணக்குகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள மறக்காமல் TNNEWS24 பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்அடுத்த பதிவில் ஆளுநர் புதிய கல்வி கொள்கை தொடர்பாக செயலாளர்களுக்கு போட்ட உத்தரவும் முதல்வர் ஸ்டாலின் ரியாக்க்ஷன் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.