ஜெய் பீம் திரைப்படம் எந்த அளவிற்கு பாராட்டுகளை பெற்றதோ அந்த அளவிற்கு தற்போது கடும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது குறிப்பாக உண்மை சம்பவம் என கூறிவிட்டு வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி அந்தோணிசாமி பெயரை மாற்றிவிட்டு குரு என இந்து பெயரில் திட்டமிட்டு சதி செய்ததும் , குற்றசாட்டை நிரூபிக்க போராடிய வன்னியர் சமூகத்தை தவறாக காட்சி படுத்தியதாகவும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன .
இந்த சூழலில் பிரபல மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது சமூகவலைத்தளத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் : உண்மைச் சம்பவம் என்பது, உள்ளதை உள்ளபடி சொல்வது. பெயர்களையும் அடையாளங்களையும் (மட்டும்) மாற்றினால், அதன் நோக்கம் சந்தேகிக்கப்படுவது இயல்பே. என குறிப்பிட்டுள்ளார் அவரது கருத்து ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என கூறிவிட்டு பெயர்களை மாற்றியது ஏதோ பட குழுவினருக்கு உள்நோக்கம் இருப்பதை தெளிவு படுத்தியுள்ளது .
இந்த சூழலில் பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வத்தமான் ஜெய் பீம் படம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு : ராஜாக்கண்ணு கொலை சம்பவத்தில் உண்மையான கதாநாயகன் என்றால் அது கோவிந்தன் தான். இவருடைய 26 வயதில் ஆரம்பித்து 39 வயது வரை திருமணம் கூட செயதுகொள்ளாமல் போராடியது இவர்தான். இவர் சார்ந்த கட்சியின் வழக்கறிஞராக இருந்ததால் உயர்நீதி மன்றத்தில் HCP ஆட்கொணர்வு நீதிப் பேராணையில் மட்டும் ஆஜராகிவிட்டு , (அதிலும் 5000 ரூபாய் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த வழக்கறிஞருக்கு பீஸ்-ம் வழங்கப்பட்டது)
அந்த வழக்கறிஞரை ஹீரோவாக சித்தரித்ததே தவறு. அவரும் கொஞ்சமும் வெக்கப்படாமல் போஸ் குடுக்கிறார் ! படத்தில் காட்டியது போல அந்த வழக்கு முழுவதும் உயர்நீதிமன்றத்தில் HCP ல் நடக்கவில்லை. CRIMINAL PROCEEDINGS ல் பல வழக்கறிஞர்கள் ஆஜராகி உள்ளார்கள். அத்தனை பேரையும் நியமித்து போராடியது கோவிந்தன் ! இவரே வன்னியர் சமுதாயத்தை சாரந்தவர் தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்தி படம் எடுப்பது எந்தவிதமான மனநிலை என தெரியவில்லை.
கொலை செய்த காவல்துறை அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி , அதை குரு என்று பெயர் மாற்றியது ஏன் ?! என இப்போது கேள்வி பல தரப்பிலும் எழுப்பப்பட்டு வருகிறது. இனி ஆர்ட் டிரெக்டர் மீது பழி போட்டு எல்லாம் தப்பிக்க முடியாது. பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என அஸ்வத்தாமன் குறிப்பிட்டுள்ளார் .
படத்தில் உண்மை சம்பவம் என கூறி தவறான தகவலை பரப்பிய சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் அப்படி கேட்கவில்லை சூர்யா குடும்பத்தின் எந்த படமும் வட மாவட்டங்களில் வெளியாகாது என வன்னியர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில் என்ன முடிவு எடுக்க போகிறார் சூர்யா என்ற கேள்வியே அதிகரித்து காணப்படுகிறது . சூர்யாவிற்கு பெயரை மாற்றவும் வன்னியர் அடையாளத்தை படத்தில் பயன்படுத்தவும் ஐடியா கொடுத்தது இயக்குனரா அல்லது வேறு ஏதேனும் அமைப்புகளா என்ற கேள்வி எழுந்துள்ளது .
உண்மைச் சம்பவம் என்பது, உள்ளதை உள்ளபடி சொல்வது. பெயர்களையும் அடையாளங்களையும் (மட்டும்) மாற்றினால், அதன் நோக்கம் சந்தேகிக்கப்படுவது இயல்பே.#சத்யமேவஜெயதே#வாய்மையேவெல்லும்
— Rangaraj Pandey (@RangarajPandeyR) November 5, 2021