தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 05 ஆம் தேதி அன்று வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 07ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 22 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கான இடத்தை பெறுவதற்கு கடும் சிக்கலை சந்தித்து வருகின்றனர் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் சீட்டில் 2 சீட் மட்டுமே விசிக விற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது, இது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்த சூழலில் மேலும் பல இடங்களில் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த சென்ற விசிகவினர் உரிய மரியாதையின்றி இருக்கிறார்களாம்.
அமர்ந்து பேசி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சென்றால் பல இடங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் உரிய நாற்காலி கூட கொடுப்பது இல்லையாம் இதையும் பொறுத்து கொண்டு தஞ்சையில் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர் விசிகவினர், ஆனால் அவர்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காத நிலையில் தலைமையிடம் புலம்பியுள்ளனர்.
இப்படி 2 சீட் வாங்குவதற்கு நமக்கு எதற்கு கட்சி எனவும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் புலம்பியுள்ளனர் இந்த சூழலில்தான் தஞ்சை மாவட்டத்தில் கூட்டணியின்றி தனித்து போட்டியிடுவதாக விசிக முடிவு செய்துள்ளது, விரைவில் விசிக பாஜக வழியில் நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் ஆனால் உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்க இருக்கிறோம் என அறிவிப்பு வெளியிட்டாலும் ஆச்சர்ய பட ஒன்றும் இல்லை என்கின்றனர் அரசியல் தெரிந்தவர்கள்.
More Watch videos