தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும் என குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஒரு தலைப்பட்சமாக செய்திகளை வெளியிட்டு வந்தனர், குறிப்பாக சட்டமன்ற பொதுதேர்தலுக்கு முன்னர் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கை காரணமாக காட்டி விவாதங்களை முன்னெடுத்தனர்.
ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாகவும், EMI முதல் சாப்பிட்டிற்கு என அனைத்திற்கும் மக்கள் கஷ்ட படுவதாகவும் கூறி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர், இதையடுத்து தமிழக ஊடகத்தில் பணிபுரியும் சிலர் ஊடக தொழிலுக்கு துரோகம் செய்துவிட்டு நேரடியாக திமுகவின் செய்தி தொடர்பாளர்களாக செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்தது.
இதற்கு முன்னர் மாரிதாஸ் தமிழக ஊடகத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட நபர்களின் செயல்பாடுகள் குறித்து, முழு விளக்கத்தை கொடுக்க பல அதிர்வலைகள் உண்டானது, பலர் ஊடகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர், சிலர் தாங்களாக தங்கள் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினர்.
இந்நிலையில் ஊடகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வெளியேறி தற்போது வேறு இடத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமான அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலினின் உறவினர் இருவரை சந்தித்து உடனடியாக மாரிதாஸை கைதுசெய்ய வேண்டும், எங்களது இந்த நிலைக்கு காரணமே அவர் தான் எனவும் இது உங்களுக்கே நன்றாக தெரியும்.
தற்போது நடப்பது நம்முடைய ஆட்சி மாரிதாஸ் மீது ஊடகத்துறையின் கொடுத்த வழக்குகள் உட்பட மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன அப்படி இருக்கையில் அவரை ஏன் கைது செய்ய வில்லை உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர், இது முதல்வர் கவனத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் முதல்வரின் ஆலோசகர்களாக இருக்கும் அதிகாரிகள் இருவர், இப்போது மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுத்தால், அது பழிவாங்கல் நடவடிக்கையாகவே மக்கள் மனதில் பார்க்கப்படும், கொரோனா நேரத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், வீண் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும், தற்போது மாரிதாஸ் மீது இருக்கும் வழக்குகளை காரணம் காட்டி கைது செய்தால் நாளை மத்திய புலனாய்வு அமைப்புகள் நாளை நம் மீதும் இதே வழியை பின்னபற்றாலம் எனவே இப்போது அமைதியாக இருப்பதே நல்லது என ஆலோசனை கூறியுள்ளனர்.
இந்த தகவல் முழுவதும் இரண்டு நெறியாளர்களுக்கும் தெரிவிக்க இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர், நாம் திமுகவினரை காட்டிலும் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என உழைத்தோம் ஆனால் நம் கோரிக்கைக்கு கூட இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையே என கலக்கம் அடைந்துள்ளனராம்.
முன்கள பணியாளர்கள் என்பதை மறந்து முக பணியாளர்களாக பணியாற்றும் நபர்கள் பலருக்கு மாரிதாஸ் மீது அப்படி என்னதான் எரிச்சலோ?