டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு தாய் வழக்கு தொடுத்திருக்கிறார்: மைனரான என் மகளை என் அனுமதி இல்லாமல் கிறிஸ்தவ மதத்திற்கு இரு என்.ஜி.ஓக்கள் மதமாற்றம் செய்துள்ளனர். அந்த என்.ஜி.ஓக்கள் - Evangelical Fellowship of India Commission on Relief (EFICOR) NGO மற்றும் Prayas NGO. அதோடு, என் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டையும் குழந்தைகள் நலக் குழுவிடம் (Child Welfare Committee) சுமத்தி, என் மகளை என்னிடமிருந்து பிரித்து, 'Global Family Charitable Trust' என்ற குழந்தை பராமரிப்பு நிறுவனம் ஒன்றிடம் என் குழந்தையை ஒப்படைத்து விட்டனர்.
அந்த குழந்தைகள் பராமரிப்பு இடத்தில் என் மகளை 5 மாதங்களாக கொடுமைக்கும் (பாலியல்?) சுரண்டலுக்கும் (cruelty and exploitation) ஆளாக்கியிருக்கின்றனர். இதைச் செய்த பெண்கள் உரிமை காப்பகம் (CWC, South District, Delhi) அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது.
இந்த தவறை சரி செய்யவும். அதோடு, இம்மாதிரி குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்கும் உரிமையை CWCக்கு வழங்கும் சிறார் சட்டம் (Juvenile Justice - Care and Protection of Children - Act, 2015 ) இம்மாதிரி CWCக்கு தவறு என்றும் அறிவிக்க வேண்டும்.
இதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசையும், சம்பதந்தப்பட்டவர்களையும் (CWC மற்றும் என்.ஜி.ஓக்கள்) கேட்டிருக்கிறது நீதிமன்றம்.
இந்த CWCயில் இருக்கும் நபர்கள் எல்லாம் லிபரல் ஆக்டிவிஸ்ட்டுகள் / இந்து விரோதிகள் - ஆம் ஆத்மி அரசியல் பின்புலம் கொண்டவர்கள். தமிழக CWC இது வரை லாவண்யா விவகாரத்தில் வாய் திறக்காததற்கு காரணம் அதன் பின்புலம். 'மைனாரிட்டிகளுக்கு' ஏதாவது பிரச்சினை என்றால் முந்தியடித்துக் கொண்டு வருவார்கள் என்ற குற்றசாட்டு உள்ளது.
இதில் திருத்தம் கொண்டுவரவிருக்கிறது மோதி அரசுஎன்ற செய்திகள் மதமாற்றத்தை தொழிலாக கொண்ட அமைப்புகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மதமாற்ற வழக்கை அடிப்படையாகக் கொண்டு அந்த மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மதர் தெரசாவின் Misssionaries of Charity சமீபத்தில் தன் உரிமத்தை இழந்ததும் இதே காரணத்துக்காகத்தான். 'தவறு செய்தவர்களை' டிஸ்மிஸ் செய்து, மீண்டும் விண்ணப்பித்து, தன் உரிமத்தை பெற்றது இந்த மிஷநரி. குழந்தைகளை விற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த லாவண்யாவை இதே போன்று பள்ளியில் மதமாற்றம் செய்ய முயன்றதும் அவர்கள் பெற்றோர் மற்றும் லாவண்யா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இறுதியில் லாவண்யா கொடுமைப்படுத்தப்பட்டு இறுதியில் தற்கொலையே செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்தியாவில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவது உறுதியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.
More watch videos