அர்ஜுன் சம்பத் உண்ணாவிரத போராட்டத்திற்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்திருப்பது இந்து சித்தாந்தம் கொண்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இதுநாள் வரை இந்து மக்கள் கட்சிக்கு ஏன் பாஜக முறையான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தை பலர் வெளிப்படுத்தி வந்த சூழலில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
அர்ஜுன் சம்பத் போராட்டம் குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :- அடைக்கும் தாள் அற்ற அன்பிற்கும், அதிதி தேவோ பவ, என்று வருவிருந்து நோக்கும் விருந்தோம்பல்
பண்பிற்கும், புகழ் பெற்ற தமிழ் மண்ணில், நிகழ்கின்ற ஆட்சி, நம் பண்பாட்டை கலாச்சாரத்தை, ஒருமைப்பாட்டை, தேசப்பற்றை, மதநல்லிணக்கத்தை, சகோதரத்துவத்தை, சிதைப்பதற்கான ஆட்சியாக நடைபெறுகிறது .
பிரித்து ஆட்சி செய்து பலனடையும் பிரித்தானிய கம்பெனியின் பாணியை பின்பற்றி, மக்களை சாதியாலும், மதத்தாலும், மொழியாலும், வழிபாட்டு முறைகளாலும், தமிழ் மக்களை துண்டாட ஒரு பெரும் சூழ்ச்சி பின்னப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எண்ணப் பட்டிருக்கிறது. வழிபாட்டுத் தலங்களை எல்லாம், மத அடையாளங்களை இழிவுபடுத்தும் நோக்கில் இடித்து தள்ளும் செயல், அப்பாவி மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நியாயங்களை மறுக்கும் செயல், சிறுபான்மையினரை விட சிறிய சமுதாயமான இறை பற்றாளர்களின் பூணூல் அறுக்க அறிவித்த செயல்.
பாஜக அலுவலகத்தில் குண்டு வீச்சு, மேதகு ஆளுநருடன் தொடரும் மோதல் போக்கு, தேர்தலில் கள்ள ஓட்டு, காவல்துறையில் திமுகவின் தலையீடு என்று தொடரும் ஆளும் கட்சியின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை 27-02-2022 ஒருநாள் அடையாள உண்ணா நோன்பு அறப்போராட்டம் நடைபெறுகிறது.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு.அர்ஜுன்சம்பத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணா நோன்பில் ஆயிரம் கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெறும் தேர்தலில் பணிகள் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. தங்கள் அருந்தொண்டும், அறப்போரும் வெற்றிபெற என் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை துக்கடா கட்சிக்கு எல்லாம் திமுக ஆதரவு தெரிவிக்கும் சூழலில் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சிக்கு அண்ணாமலை கொடுத்திருக்கும் ஆதரவு சரியான நேரத்தில் முறையாக செய்யப்பட்ட செயல் என்று கூறப்படுகிறது.
More watch videos