Cinema

அவர்களும் நம் பார்ட்னர்தான் நிலை மறந்தவன் தயாரிப்பாளர் போட்ட அதிரடி பதிவு.. "என்ன மனுஷன்" சார்!


திரைத்துறை என்பது பொழுதுபோக்கு என்ற இடத்தை தாண்டி தற்போது அரசியல் பேசும் இடமாக மாறி வருகிறது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இந்து மதத்தை விமர்சனம் செய்யும் படங்கள் மாதம் ஒன்று வெளியாகிய வண்ணம் வந்து கொண்டு இருக்கின்றன, இந்த சூழலில்தான் நிலை மறந்தவன் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட முடிவு செய்தது தர்மா விஸ்வல் கிரீயேசன்.


பல முறை கேரளா சென்று தங்களது வாய்ப்பை உறுதி படுத்திய பின்பு பல்வேறு பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த வெள்ளி அன்று திரைப்படம் திரைக்கு வந்தது, திரைப்படத்தை பார்த்த பலரும் என்ன ஒரு அற்புதமான திரைப்படம் நடப்பதை அப்படியே பதியவைத்து விட்டார்கள் என அடித்து சொல்லி வருகின்றனர்.

இந்த சூழலில் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியானதாக செய்திகள் வெளியான நிலையில் நிலைமறந்தவன் தயாரிப்பாளர் பதிந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது அது பின்வருமாறு :

படம் இந்த வெப்ஸைட்டில் வெளியாகி விட்டது, அந்த வெப்ஸைட்டில் வெளியாகி விட்டது என குதூலிக்கும் குழந்தைகளா, அவர்கள் எல்லாம் அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம் எனும் நம் நோக்கத்தின் சேனல் பார்ட்னர்கள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். இந்த அதிகார துஷ்பிரயோக திமுக ஆட்சியில், போட்ட பணம் போய் விடுமோ, லாபம் கிடைக்காதோ என்றெல்லாம் யோசித்திருந்தால் இதில் இறங்கியிருக்கவே மாட்டேன்.

 "இப்போது கூட அடுத்த படம் இறங்குங்கள் நாங்கள் துணையிருக்கிறோம்" என பலரும் கூறிய வண்ணம் உள்ளனர்.  தற்போது இயன்றவரை இந்த நிலைமறந்தவன் திரைப்படத்தை மக்களுக்கு கொண்டு செல்வதே நம் பணி.  மதமாற்றம் எனும் மிக மிக கொடிய ஒரு வைரஸை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நம் நோக்கம்.  காசு, பணம், துட்டு, மணியெல்லாம் நோக்கமல்ல. அந்த வகையில் தமிழ் ராக்கர்ஸ் முதல் அனைத்து சேனல்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  ஒரு சில வாரங்களில் ஓ.டி.டி.யில் கிடைக்கவில்லை என்றால் நம் சங்கநாதம் யூடியூப் சேனலிலேயே வெளியிட உள்ளோம்.

மேலும் படத்தை எந்த வலைமனையில் வேண்டுமானால் பார்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்பும் தொகையை "தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்" வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுங்கள். நிலைமறந்தவன் திரைப்பட விநியோகம் முடிந்த பிறகு, அடுத்த பிராஜக்டை பரிசீலிப்போம்.சேட்டிலைட் விற்பனையை முடக்கிவிட்டோம். டிஜிட்டல் விற்பனையை, எஃப்.எம்.எஸ் விற்பனை முடக்கிவிட்டோம்.

திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களை முடக்கிவிட்டோம். இனி இவர்கள் காலி, வேறு யாரும் இனி இப்படி திரை துறையில் இறங்க மாட்டார்கள் என நினைக்கும் மிஷநரி மாஃபியாவுக்கு இது மரண அடியாக இருக்கும்.

மேலும் இந்த ஒரு வருட சினிமா அனுபவம், எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ள ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. பல கோடிகளை கொட்டினாலும் கிடைக்காத அனுபவம் அது. 

நாங்கள் வீழ்வோம் என்று மட்டும் கனவிலும் நினைத்து விடாதீர்கள்.வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது நம் தர்மமாக இருக்கட்டும்.இதுவரை ஏதோ ஒரு வகையில் இந்த மகத்தான விழிப்புணர்வு பணியில் அடியேனோடு பயனித்து வந்த ஒவ்வொரு நல்லுள்ளங்களுக்கும் பாதம் பணிந்த வணக்கங்கள்.

தர்மம் காப்பவரை தர்மம் காக்கும்.அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம் என அவர் குறிப்பிட்டுள்ளார், பணம் பார்க்க திரைத்துறையில் வந்த நபர்களை காட்டிலும் படம் மக்களை சென்று அடைந்து விழிப்புணர்வு அடைந்தால் போதும் என்று எத்தனை தயாரிப்பாளர்கள் நினைப்பார்கள் அருமை சார் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.