நடிகர் விவேக்கின் மரணம் தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, சின்னகலைவாணர் என அழைக்கப்படும் விவேக் நேற்றைய தினம் மாரடைப்பால் காலமானார், அவரது மரணம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், பல்வேறு சர்ச்சைகளும் அதனை ஒட்டி அதிகரிக்க தொடங்கியது.
மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்பு, கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டார் விவேக், மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக செய்தியாளர்களை சந்தித்தும் அவர் பேசினார், இந்நிலையில் விவேக் மாரடைப்பால் இறக்க, அவர் தடுப்பூசி போட்டுகொண்டதால் இறந்தார் என புரளிகள் பரவ தொடங்கின.
இது கொரோனா தடுப்பூசி போட பதிவு செய்த நபர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சமடையும் சூழலை உண்டாக்கியது, விவேக் இறப்பிற்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது காரணமல்ல என பலமுறை மருத்துவ நிர்வாகம் விளக்கம் அளித்த பின்பும் புரளிகள் நின்றபாடு இல்லை.இந்த சூழலில்தான் மக்களவை உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் நடிகர் விவேக் இறப்பை முன்னிட்டு #நடிகர்_விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே #அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி என தெரிவித்து ட்விட் செய்திருந்தார்.
இது தடுப்பூசி போட்டு கொண்டதால்தான் விவேக் இறந்தார் என்ற வதந்திக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்தது, கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டு கொண்டவர் திருமாவளவன் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார், திருமாவளவன் தவிர முக ஸ்டாலின், வீரமணி, இன்னும் பல அரசியல்வாதிகளும் கொரோனா தடுபூசி போட்டு கொண்டனர், அவர்களும் ஆரோக்கியமாக உள்ளனர்.
அப்படி இருக்கையில் திருமாவளவன் தெரிவித்த கருத்து, இந்திய அளவில் விமர்சனத்தை உண்டாக்கியது, எப்படியாவது கொரோனா தடுப்பூசி போட்டு இந்திய மக்களை காப்பாற்ற வேண்டும் என நினைத்த மத்திய அரசின் முயற்சிக்கு கடும் பின்னடைவை உண்டாக்கியது, விவேக் மரணம் குறித்து பிரதமர் அஞ்சலி செலுத்தி ட்விட்டர் பதிவு ஒன்றையும் பதிவிட்டு இருந்தார்.
அப்போது தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த சூழலிலும், திருமாவளவன் போன்றோர் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே அச்சத்தை உண்டாக்குகிறார்கள், மேலும் பிரிவினையை உண்டாக்கும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என பல்வேறு தகவல்களை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து பிரதமர் மோடி நேற்றைய தினம் இந்தியாவில் தடுப்பூசிக்கு எதிராக புரளி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயாராகுங்கள் தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்கு பிறகு, தடுப்பூசி குறித்து போலி தகவல்கள் மக்களை அச்சமடைய வைக்கும் தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், வேண்டும் என்றால் சட்டத்தில் புதிய விதிகளை உண்டாக்கும் வகையில் சட்டத்தை மாற்றி அமைக்கவும் தயாராக இருங்கள் என தெரிவித்து இருக்கிறார்.
மிகவும் கொந்தளிப்புடன் நடவடிக்கைக்கு தயாராகுங்கள் என பிரதமர் அதிகாரிகளிடம் தெரிவித்து இருப்பது திருமாவளவன் போன்றோருக்கு அரசல் புரசலாக தெரியவர, தற்போது அடக்கி வாசிக்க தொடங்கியுள்ளாராம் திருமாவளவன்.