Politics

#BREAKING திமுகவின் ஸ்கெட்ச் கைமீறி போன விவகாரம் நடவடிக்கை எடுக்குமா தமிழக பாஜக?

#BREAKING திமுகவின் ஸ்கெட்ச் கைமீறி போன விவகாரம் நடவடிக்கை எடுக்குமா தமிழக பாஜக?
#BREAKING திமுகவின் ஸ்கெட்ச் கைமீறி போன விவகாரம் நடவடிக்கை எடுக்குமா தமிழக பாஜக?

தமிழகத்தில் பாஜக கால் பதிக்க அக்கட்சியின் தேசிய தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, இருப்பினும் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது வரும் தேர்தலின் முடிவுகளில் இருந்து மட்டுமே தெரியவரும் இந்நிலையில் பாஜகவில் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் கருத்து மோதல்கள் அக்கட்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் அமைந்துள்ளது.


பாஜகவில் சமீபத்தில் இணைந்த பிரபல பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன், திமுகவின் தலைமையை விமர்சனம் செய்து கருத்து ஒன்றை பதிவிட்டார், அதில் திமுக தலைமையின் மொழி பற்று குறித்தும் விமர்சனம் செய்தார், இது திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரிக்கும் வகையில் அமைந்தது என  கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வந்தது.

மேலும் பாஜக வட இந்தியர்களுக்கு ஆதரவான கட்சி என திமுக வைக்கும் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் எடுபட்டது, திராவிடர் என்ற சொல்லே தமிழகத்தில் இந்து மதத்திற்கு எதிரான குரலாக அமைய உதவுகிறது எனவும் தமிழர்களை ஏமாற்றும் செயலாக அமைந்துள்ளது என விமர்சனங்கள்  எழுந்தன.

இதற்கிடையில் பாஜகவை சேர்ந்த ஒருவர் மதன் ரவிச்சந்திரனுக்கு கடிதம் ஒன்றிணை எழுதினார், அதில் மதன் தெலுங்கு மொழி பேசும் நபர்களை தொடர்ந்து தவறாக பேசுவதாகவும், அதனை நிறுத்தி கொள்ளவேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார், இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, திமுகவை விமர்சனம் செய்யும் நோக்கில் முன்வைக்கப்பட்ட கண்டனங்களுக்கு, பாஜகவை சேர்ந்த ஒருவர் அதே கட்சியை சேர்ந்த நபருக்கு எதிராக பேசுவது ஏன் எனவும் கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்த நபர்கள் கருத்து ரீதியாக ஒன்றாவதை விடுத்து, மோதல் போக்கை கடைபிடிக்கும் சூழல் உண்டாகியுள்ளது, மேலும் மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்  மீதும் வன்மத்தை விதைக்கும் விதமாக சில கருத்துக்களை தினேஷ் ரோடி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பாஜக ஆதரவாளர்கள் இடையே பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கட்சியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை கட்சி தலைமையிடம் முறையிடலாம் அல்லது சம்பந்தப்பட்ட நபரிடம் நேரில் விளக்கம் கேட்கலாம் அதை விடுத்து, ஒரு சமூகத்தை இழிவாக பேசுவது மேலும் மேலும் கட்சியில் பிரிவினையை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது, பொது வெளியில் சர்ச்சையை உண்டாக்கிய தினேஷ் ரோடி என்பவர் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறாரா என தெரியவில்லை.

திமுக தலைமை பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை பலரையும் சர்ச்சையில் பேசிய நிலையிலும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் சாதி மொழி ரீதியாக திமுக தலைமைக்கு எதிராக கருத்துக்களை கூறவில்லை மேலும் பொதுவெளியில் விமர்சனமும் செய்யவில்லை, அப்படி இருக்கையில் ஏன் பாஜகவை சேர்ந்த தினேஷ் ரோடி என்பவர் செயல்பாடு பலத்தை இழப்பை பாஜகவிற்கு உண்டாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பாஜக தமிழக தலைமை தொடர்ந்து அமைதியை கடைபிடித்தால் இழப்பு கட்சிக்குத்தான் என பொதுவான நபர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் தூண்டுதலின் பேரில் தினேஷ் ரோடி என்பவர் மதன் மீது மொழி ரீதியாக விமர்சனம் வைத்து அவரை பாஜகவில் இருந்து வெளியேற்றவும், திமுக ஆட்சிக்கு வந்தால் மதனை பழிவாங்க திமுக திட்டமிட்டதற்கு உதவும் வகையில் தினேஷ் ரோடி என்பவர் செயல்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.