திமுக தலைமை அடுத்து ஆட்சிக்கு வரப்போவது நாம் தான் என தீவிர நம்பிக்கையில் இருக்கிறதாம் அதன் வெளிப்பாடாக அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம் என்பது குறித்து இப்போதே ரெடி செய்து விட்டார்களாம், அதில் திமுகவின் மூத்த தலைவர்கள், பெண்கள், சாதி ரீதியாக வாய்ப்புகள், உதயநிதி ஆதரவாளர்கள், ஸ்டாலின் மருமகன் சபரிசன் ஆதரவாளர்கள் என அனைவருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
PTR தியாகராஜன் சபரீசன் கோட்டாவிலும், அன்பில் மகேஷ் உதயநிதி கோட்டாவிலும் இடம்பெற்றுள்ளார்கலாம், ஆனால் ஒப்பிற்கு கூட கனிமொழி ஆதரவாளர்கள் என அறியப்படும், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் பெயர்கள் பட்டியலில் அடிப்பட வில்லையாம், 2016 சட்டமன்ற பொது தேர்தலின் போது கனிமொழி தனது ஆதரவாளர்கள் 30 பேருக்கு சீட் வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால் இந்த தேர்தலில் கனிமொழியின் தீவிர ஆதரவாளர்கள் என அறியப்படும் 90% பேர் ஓரம்கட்டபட்டு, தேர்தலில் வாய்ப்பு அளிக்கபடவில்லையாம், மீதமுள்ளவர்களுக்கு வாய்ப்பு அளித்தாலும் தோல்வி பெறுவோம் என தெரிந்த தொகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தேர்தல் பணியாற்றி இருக்கிறார் கனிமொழி.
ஆனால் அமைச்சர்கள் கோட்டாவிலும் தனது ஆதரவாளர்களுக்கு குறைந்தபட்சம் மூவருக்காவது வாய்ப்புகள் அளிக்கப்படும் என காத்திருந்த கனிமொழிக்கு, தற்போதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாம், இதனால் பொறுமையாக இருந்தவர் கொந்தளித்து விட்டாராம், தேர்தல் தொடங்குவதற்கு முன்பு கட்சி பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றில் பெரியார், கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் புகைப்படத்தை தவிர யாருடைய புகைப்படமும் இடம்பெற கூடாது என அறிக்கை விடுத்தீர்கள்.
அந்த அறிக்கையை பின்பற்றி நான் செல்லும் இடங்களில் எனது புகைப்படம் எங்குமே வைக்கப்படவில்லை, ஆனால் sஉதயநிதி செல்லும் இடங்களில் அவரது பேனர் வைக்கப்படுவதற்கான காரணம் என்ன? உண்மையில் ஸ்டாலின் கொடுத்த அறிவிப்பு எனது புகைப்படம் இடம்பெறாமல் இருக்கவா? என பல்வேறு துணை கேள்விகளை குடும்ப தலைவர் ஒருவரிடம் எழுப்பி இருக்கிறார்.
இதனால் நாளுக்கு நாள் கனிமொழி தொடர்ந்து கட்சியில் ஓரம்கட்ட படுவதும், உதயநிதி முன்னிலைப்படுத்த படுவதும் இரண்டு தரப்பிற்கும் இடையே மன கசப்பை அதிகரித்து வருவதை அறிந்த ஸ்டாலின் கனிமொழியை சமாதான படுத்தியிருக்கிறாராம், தற்போது கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் கனிமொழியும் ஒருவர், அவருக்கானா பங்கு விகிதத்தை அதிகரித்து கொடுப்பதாகவும், ஆட்சி அமைந்த பின்பு பல்வேறு வாரிய தலைவர் பொறுப்புகள் கனிமொழி ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படும் எனவும் மேலும் கட்சியில் அதிகாரமிக்க பதவி கனிமொழிக்கு கொடுக்கப்படும் எனவும் உறுதி அளித்திருக்கிறாம் ஸ்டாலின்.
தேர்தல் முடிவுகள் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் திமுக பெரும்பான்மை பெற்றால் மட்டுமே, ஸ்டாலின் நினைத்தது நடக்கும் எனவும் திமுக தனி பெரும்பான்மை பெறவில்லை என்றால் உட்கட்சிக்குள்ளே பதவிகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் வெடிக்கலாம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.