Tamilnadu

என்ன ஐ.நா-சபைக்கு போகலைனு சொல்லி அசிங்கப்படுத்தி கதறிய திருமுருகன் காந்தி!

Thirumurugan Gandhi
Thirumurugan Gandhi

மாரிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சூழலில் தற்போது மாரிதாஸ் மீது பலர் புகார் கொடுத்து தாங்கள் மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ காட்சிகளால் பாதிக்கப்பட்டோம் என்று பேட்டி கொடுத்து வருகின்றனர், அந்த வகையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று மாரிதாஸ் மீது புகார் கொடுத்துள்ளார்.


அதில் மாரிதாஸ் பல்வேறு முறை தன்னை பற்றி தவறான கருத்துக்களை கூறி உள்ளதாகவும், ஐநா சபைக்கு செல்லவில்லை என்று கூறி தனது புகழை கெடுத்ததாகவும் மேலும் பாகிஸ்தான் உடன் தொடர்பு இருப்பதாக கூறி என்னை பயங்கரவாதி போல மாரிதாஸ் சித்தரித்ததாகவும் ஆவேசமாக பேசினார் திருமுருகன் காந்தி. என்னை மட்டும் இல்லாமல் தனியார் ஊடகத்தில் பணியாற்றிய பலர் மீதும் மாரிதாஸ் இந்த செயலை செய்துள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேட்டி அளித்துள்ளார் திருமுருகன் காந்தி, திருமுருகன் காந்தி அளித்த பேட்டி என்று சொல்வதை காட்டிலும் கதறல் என்றே சொல்லவேண்டும் என மாரிதாஸ் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் ரேஷன் கடைகளை மமோடி மூடி விடுவார் என திருமுருகன் காந்தி சொன்னாரே அது உண்மையா உண்மையில் திருமுருகன் காந்தி சொன்ன பொய்களை பட்டியல் போட்டால் நிச்சயம் அவரை தான் கைது செய்யவேண்டிய நிலை உண்டாகும் என குறிப்பிட்டு திருமுருகன் காந்திக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மாரிதாஸ் என்ற ஒற்றை நபர் மீது இத்தனை நபர்கள் புகார் அளிக்கிறார்கள் என்றால் அதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் மாரிதாஸ் என்ன நன்மை செய்துள்ளார் என அடித்து கூறுகின்றனர் மாரிதாஸ் ஆதரவாளர்கள் திருமுருகன் காந்தி அளித்த பேட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது.