Tamilnadu

இது பாஜகவின் பொது கூட்டம் இல்லை வேறு என்ன? உ.பி-யில் இரண்டு முறை தொடர்ச்சியாக ஒருவர் முதல்வராக முடியாதா?

Bjp
Bjp

உத்திரபிரதேச மாநில தேர்தல் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒருவர் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்றது அல்லது வெற்றி பெற்றது இல்லை என்பது தான் கடந்த கால வரலாறு.. கோவிந்த் பலபாக் பண்ட் தொடங்கி கல்யாண் சிங், முலாயம் யாதவ், மாயாவதி, அகிலேஷ் யாதவ், யோகி என இந்த பட்டியல் மாறி மாறியே அமைந்து வருகின்றன.


இந்த சூழலில் மீண்டும் யோகி ஆதித்யநாத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறது பாஜக, தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவர் இல்லை என்ற உபி வரலாறை யோகி ஆதித்யநாத் மாற்றுவார் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு இருப்பதால் இந்த முடிவை அந்த கட்சி எடுத்துள்ளாதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் பாஜக நடத்திய பூத் கமிட்டி கூட்டம் மிக பெரிய அதிர்வலைகளை உத்திரபிரதேச தேர்தல் களத்தில் உண்டாக்கியுள்ளது, உத்தரபிரதேச தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், காங்கிரஸ் - சமாஜ்வாதி தன் களப்பணிகளில் சென்ற மாதமே தீவிரமாக இறங்கின ஆனால் தற்போது முழுமையான சோகத்தில் முடங்கி விட்டன. காரணம் விவசாய. சட்ட திருத்த மசோதா திரும்ப பெறப்படும் என பிரதமர் அறிவித்தது.

அதே வேளையில், பாஜக இப்போது தான் தன் வேலையை ஆரம்பித்திருக்கிறது.  பாஜக தேசிய செயலர் சத்திய குமார்  உத்தரபிரதேசத்தில் "பூத் கமிட்டி தலைவர்கள்" கூட்டத்தைக் கூட்டி, அந்தப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் பூத் கமிட்டி தலைவர்கள் மட்டுமே ஒரு பொது குழு கூட்டம் போல் உள்ளனர்.

ஒரு உறுப்பினர் குடும்ப நபர்களை தவிர்த்து 20 பேரை சந்தித்து பாஜக செயல்படுத்திய திட்டங்களை விளக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது, எப்படி இருந்தாலும் நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் தேர்தல்களில் ஒன்றான உத்திர. பிரதேச மாநில தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பே அதிகரித்து காணப்படுகிறது.

இது வரை வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில் உபியில் பாஜக ஆட்சியே மீண்டும் அமையும் என குறிப்பிட்டு இருக்கின்றன.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.