அதிர்ச்சி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் மோடி காரணம் இன்றி எதையும் செய்யமாட்டார் என தெரிவித்து இருப்பவர் ஸ்டான்லி ராஜன், அவர் இது குறித்து குறிப்பிட்ட தகவல்களும், தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யபட்டவன் கொடுத்த வாக்கு மூலம் என்ன என குறிப்பிட்டு இருப்பதும் நிச்சயம் அதிர்ச்சியை கொடுக்கின்றன.
இது குறித்து ஸ்டான்லி ராஜன் தெரிவித்த கருத்து என்னவென்றால், பஞ்சாபின் சமீபத்திய குழப்பங்களையும் அங்கு நடக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களையும் சரியாக உணர்ந்தால் விவசாயிகள் சட்ட விவகாரத்தில் மோடி ஏன் பின்வாங்கினார் என்பது தெரியும் பஞ்சாபில் நிலமை கொஞ்சம் அல்ல மிக மோசமாகத்தான் இருக்கின்றது, அங்கு போதை பொருள் கடத்தல் அதிகம் இருக்கின்றது என அக்கட்சியின் காங்கிரஸ் பிரமுகர் சித்துவே ஒப்புகொண்டு போராட்ட களத்துக்கும் வந்துவிட்டார் போதைபொருளில் சேகரிக்கபடும் அபரிமிதமான பணமே தீவிரவாத செயல்களுக்கு மூலம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று சில வாரங்களுக்கு முன்பு அம்ரீந்தர் சிங் எனும் பஞ்சாபிய முன்னாள் முதல்வர் அமித்ஷாவினை சந்தித்து பஞ்சாபிய எல்லையில் கடத்தபடும் ஆயுதங்கள் பற்றி கவலை தெரிவித்தார்
இந்நிலையில் காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த ஜலந்தரின் ஹர்தீப் சிங் என்பன் என்.ஐ.ஏவினால் கைது செய்யபட்டான் அவனிடம் விசாரணை நடக்கின்றது, அந்த விசாரணை முடிவு பெரும் அதிர்சியூட்டும் செய்திகளை கொடுக்கின்றது ஹர்தீப் சிங் கனடாவில் இருக்கும் சீக்கிய அமைப்பினரோடும் அவர்கள் வலைபின்னலில் லண்டன் முதலான இடங்களில் இருக்கும் தேசவிரோத சீக்கிய அமைப்போடும் தொடர்பில் இருந்ததும் அந்த அமைப்புக்களின் ஸ்லீப்பர் செல்லாக அவன் செயல்பட்டதும் தெரியவந்தது
விவசாயிகள் போராட்டத்தில் அரசின் மேல் அதிருப்தியில் இருக்கும் இளைஞர்களை வளைத்து அவர்கள் மூலம் மும்பை கோவை போல தொடர் குண்டு வெடிப்பும், இன்னும் பலமுனை தாக்குதலும் நடத்த திட்டமிட்டதும் தெரிய வந்திருக்கின்றது தூத்துகுடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தது போல இந்த விவசாயிகள் போராட்டத்தில் இவர்கள் புகுந்து பெரும் நாசம் செய்ய திட்டமிட்டிருக்கின்றார்கள் இது இந்திராவுக்கு வைக்கபட்ட அதே வியூகம் ஆனால் சுதாரித்த மோடி அரசு பின்வாங்கி சட்டங்களை திரும்பபெற்றுவிட்டு போராட்டத்துக்கான வாய்ப்பினை முடக்கிவிட்டது, போராட்டக்காரர்கள் இதனால் தீவிரத்தை குறைக்கும் நேரம் இந்த நாசகார சக்திகளை வரிந்து தூக்கி கொண்டிருக்கின்றது
நிச்சயம் போராட்டம் நடக்கும் பொழுது இவர்கள் மேல் கைவைத்தால் நிலமை விபரீதமாகும் மிகபெரிய ரத்த களறி எற்பட்டிருக்கும் இதனால் தான் சட்டத்தை அகற்றி அமைதி நிலவ வழி செய்து இப்பொழுது அந்த போராட்ட முன்களம் இல்லாத நிலையில் எளிதாக தீவிரவாதிகளை அமுக்கியிருக்கின்றது அரசு மோடி அரசு மற்றும் என்.ஐ.ஏ போன்ற வலுவான அமைப்புகளின் நடவடிக்கையாலும், சர்வதேச உளவு தகவல்களுடனும் மிகபெரிய சதியினை இந்தியா முறியடித்திருக்கின்றது
ஹர்தீப் சிங்கிடம் நடக்கும் விசாரணை இன்னும் பலரை நோக்கி திரும்புகின்றது, பாகிஸ்தானின் ஆதரவும் இன்னும் பல அன்னிய சக்திகளின் திட்டமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன விவசாயிகள் போராட்டம் எனும் மேகத்தின் பின்னால் மறைந்து கொடும் நாகங்களும் புலிகளும் வந்து நாட்டை நாசமாக்க இருந்தன, மோடி அரசு அதை லாவகமாக தவிர்த்து நாட்டை காத்திருக்கின்றது
மிகபெரிய சதிதிட்டம் முறியடிக்கபட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது, அதிர்ச்சி தகவல்கள் இனி ஒவ்வொன்றாக வெளிவரும் காரணமின்றி மோடி எதையும் செய்வதில்லை சரியான நேரத்தில் மிக சரியான நடவடிக்கை எடுத்து நாட்டை காத்திருக்கின்றார் அந்த திருமகன் என குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பல்வேறு இடங்களில் கடந்த 15 நாட்களாக தேசியம் புலனாய்வு முகமையான NIA பல நபர்களை கைதி செய்து இருப்பதும் அவர்களுக்கு ஆதரவாக எந்த இயக்கமும் இதுவரை வாய் திறக்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.
More news from tnnews24