தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சமீபத்திய செயல்பாடுகள் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது, கொரோனா பரவும் இந்த நேரத்தில் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுக்காமல், இந்துக்களின் நம்பிக்கைகளில் தொடர்புடைய விவகாரங்களில் கருத்து தெரிவித்து கடும் சர்ச்சையை உண்டாக்கினார்.
குறிப்பாக ஜக்கி வாசுதேவ் மீது சரமாரியாக குற்றம் சுமத்தியவர், ஒருமையில் அவரை கடுமையாக கடும் சொற்களால் பேசி தான் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பதவிக்கு உள்ள அங்கீகாரத்தை குறைத்து கொண்டார், இந்நிலையில் ஜக்கி வாசு தேவ் தரப்பிலும், கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது, அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என பொது வெளியில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் பழனிவேல் தியாகராஜன் இந்திய குடிமகன் இல்லை எனவும் அவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் என்றும், அவர் தேர்தலில் போட்டியிட்டதே சட்ட விரோதம் என்ற தகவல் பரவ அது திமுக தலைமையை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த உடனடியாக பழனிவேல் தியாகராஜனை வாயை மூடிக்கொண்டு கொடுத்த பணியை ஒழுங்காக செய்யுமாறு அறிவுறுத்த வேறு வழியின்றி அறிக்கை வெளியிட்டு பல்டி அடித்துள்ளார் பிடிஆர்.
இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் H ராஜாவிடம் பழனிவேல் தியாகராஜன் இந்திய குடிமகன் இல்லை என்று கூறப்படுகிறது, இது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு பொறுத்து இருந்து பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார். H ராஜா மற்றும் பலர் பழனிவேல் தியாகராஜன் குறித்த விவரங்களை சேகரித்துள்ளதாகவும் விரைவில் திமுகவிற்கு எதிராக புயலே அடித்தாலும் ஆச்சர்ய பட ஒன்றும் இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
தமிழகத்தில் தொடர்ந்து முதல்முறை அமைச்சர்களாக பொறுப்பேற்ற பலர் வார்த்தை பிரயோகங்கள், நடவடிக்கைகள் பொது மக்கள் மத்தியில் திமுக குண்டர் அரசியலை தொடங்குமோ என்ற அச்சத்தை உண்டாக்கும் வகையில் அமைந்து இருப்பதாக பலரும் குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.