அத்தனையும் நடிப்பா நயன்தாரா தடுப்பூசி போட்டு கொண்டாரா? வெளியான இரு தரப்பு உண்மை?அத்தனையும் நடிப்பா நயன்தாரா தடுப்பூசி போட்டு கொண்டாரா? வெளியான இரு தரப்பு உண்மை?
அத்தனையும் நடிப்பா நயன்தாரா தடுப்பூசி போட்டு கொண்டாரா? வெளியான இரு தரப்பு உண்மை?

தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் நயன்தாரா இவர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதாக புகைப்படங்கள் வெளியான நிலையில், அந்த புகைப்படங்கள் சர்ச்சையை உண்டாக்கியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று நடிகை நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.இந்நிலையில், நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.

நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும் ஊசி எங்கே என கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தன்னுடன் திரைப்படத்தில் நடிப்பவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டியது அவசியம் என முன்னணி நடிகர் ஒருவர் வலியுறுத்தியதால், வேறு வழியின்றி நயன்தாரா தடுப்பூசி போடும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் உண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் சிறிய வடிவிலான ஊசி இருந்ததால் அப்புகை படத்தில் கண்ணுக்கு தெரியவில்லை என நயன்தாரா தரப்பில் விளக்கமாக கூறப்படுகிறது, இரண்டாவது டோஸ் போடும்போது அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறோம் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் மற்றொரு தரப்போ இல்லை இல்லை மூத்த நடிகர் வற்புறுத்திய காரணத்தினால் அவரை சமாதானம் செய்ய வேறு வழியின்றி போட்டோ சூட் நடத்தி இருக்கிறார் நயன்தாரா, அவர் அழுகையே அவரை காட்டி கொடுக்கிறது என எதிர் தரப்பும் விமர்சனங்களை வைக்கிறது, எது எப்படியும் இன்றோ அல்லது விரைவாக குமரன் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உண்மையை கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைவருக்கும் இடது கையில் தடுப்பூசி போடும் போது நயன்தாராவிற்கு மட்டும் இடது கையில் தடுப்பூசி போடுகிறார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது

Share at :

Recent posts

View all posts

Reach out