வங்கதேசத்தில் இந்துக்கள் தொடந்து தக்காப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அவர்களின் சொத்துக்கள் சூரையாட படுவதும் அரங்கேறி வருகிறது, இந்நிலையில் வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் ஹிந்து கோவில்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
ஹிந்துக்களின் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் அந்த நாட்டின் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, வன்முறைக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஸாமான் கானுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
இருப்பினும் கலவரங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளது, இந்த சூழலில் உலக நாடுகளின் கவனத்திற்கு இந்துக்கள் வங்கதேசத்தில் சந்திக்கும் துயரத்தை எடுத்து சென்றனர்,இதன் பலனாக முன்னாள் அமெரிக்க வேட்பாளர் ரேஸில் இருந்தவரும், முதல் காங்கிரஸ் இந்து உறுப்பினருமான துளசி கப்பார்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வங்கதேசத்தில் நடைபெறும் கலவரம் கவலை அளிக்கிறது, அங்கு இந்து கோவில்கள் தேச படுத்துவது தடுக்கப்பட வேண்டும், இந்துக்கள் பாதுகாக்க படவேண்டும் என குறிட்டுள்ளார் மேலும் இது ஜீஹாத் பயங்கரவாதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. துளசி காப்பார்ட் ஒரு அமெரிக்க அரசியல்வாதி மற்றும் ஐக்கிய நாடுகள் ராணுவம் ரிசர்வ் பணியாற்றிய அதிகாரி அமெரிக்க பிரதிநிதி க்கான ஹவாய் 2 வது காங்கிரஸ் மாவட்டத்தில் 2013 ல் 2021. 2012 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் காங்கிரசின் முதல் இந்து உறுப்பினர்மற்றும் காங்கிரசின் முதல் சமோவா-அமெரிக்க வாக்காளர் உறுப்பினர் ஆவார்.
உலகநாடுகளின் கவனத்திற்கு வங்கதேசத்தில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் சென்று இருப்பதால் ஆளும் அரசாங்கத்திற்கு கடும் சிக்கல் உண்டாகி இருக்கிறது. துளசி கப்பார்ட் பேசிய விடியோவை பார்க்க கிளிக் செய்யவும்