Cinema

பெரியார் குத்து போட்ட சிம்புவிற்கு வைக்கப்பட்ட பெரிய ஆப்பு என்ன ராசா போதுமா?

actor simbu
actor simbu

கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் குத்து என்ற ஆல்பம் சாங் ஒன்றில் நடிகர் சிம்பு நடனம் ஆடி இருந்தார், அதில் இடம்பெற்ற வாசகங்கள் பெரியாருக்கு ஆதரவாகவும் மறைமுகமாக பாஜகவின் கொள்கையை விமர்சனம் செய்யும் விதமாகவும் அமைந்தது, இந்த சூழலில் தற்போது பாஜகவினரும் பெரியார் எதிர்பாளர்களும் சிம்புவை கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.


அதற்கு காரணம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் திரைப்படங்கள் பட்டியலில் இருந்து மாநாடு திரைப்படம் வெளியேறுவதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது ஒரு காரணமாக பார்க்க பட்டாலும் அதன் பின்னணியில் பிரபல தயாரிப்பு நிறுவனம் உச்ச நடிகர் படத்தை அதே நாளில் திரைக்கு கொண்டுவர இருப்பதால் அதற்கு இடையூறு உண்டாக கூடாது என சிம்பு படத்தை வெளியிட தடுத்ததாக திரை துறையில் கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த சிம்புவின் தந்தை கூறியதாவது  தமிழ் சினிமாவில் சிலர் நடப்பு வினியோகிஸ்தர் சங்கம் என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் சிம்பு பணம் கொடுக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலர் மறைமுகமாக செயல்படுகின்றனர். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். இந்த கட்டபஞ்சாயத்து கும்பல் மீதும், சிவப்பு கார்டு போடும் கும்பல் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து கும்பலை களை எடுப்பதற்காக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் என்ன ஆனது. எல்லா நடிகர்களுக்கும் இது போன்ற பிரச்சினை உள்ளது. டெல்லி வரை நான் இந்த பிரச்சினையை கொண்டு செல்வேன். சிம்புவின் தாய் உஷா கூறியதாவது  தொடர்ச்சியாக சிம்பு நடித்து வரும் படங்களுக்கு சிவப்பு கார்டு போடுகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார்கள். சிம்பு நடித்துள்ள மாநாடு படம் வெளிவர விடாமல் தடுக்கிறார்கள்.

தீபாவளிக்கு சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தை வெளிவர விடாமல் தடுத்தால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லும் வகையில் அவரது வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக உள்ளேன் என தெரிவித்தார், இந்த சூழலில் மத்திய அமைச்சரை தொடர்பு கொண்டு தமிழகத்தில் திரை துறையில் முதல்வர் பெயரை பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் என புகார் கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் தரப்பிலோ அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இது நடக்கும் என உங்களுக்கு நன்றாக தெரிந்தும் ஆதரவாக செயல்பட்டீர்கள், போதாத குறைக்கு உங்கள் மகன் பெரியார் குத்து என வசனம் பாடல் போட்டு எங்களை விமர்சனம் செய்தார் இவற்றில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என நாசுக்காக கூறிவிட்டாராம்.. இப்போது பெரியார் குத்து பாடல் போட்ட சிம்பு வீட்டில் குத்து கால் போட்டு தனது படம் வெளியாகுமா? ஆகாதா? எந்த ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாராம்.

அரசியல்வாதிகள் அரசியல் செய்தால் அவர்களுக்கு லாபம் அதே நேரத்தில் நடிகர்கள் அரசியல் பேசினால் என்ன நடக்கும் என்பது தற்போது தெளிவாக உணர்த்தப்பட்டு உள்ளது என்கின்றனர் கோடம்பாக்கம் வட்டாரங்கள்.. பெரியார் குத்து பாடலில் என்ன ராசா என மறைமுகமாக பாஜக தலைவர் H ராஜாவை கிண்டல் செய்த சிம்புவை நோக்கி என்னா சிம்பு என பாஜகவினர் கிண்டல் அடித்து வருகின்றனர்.