தமிழகத்தில் நடைபெற்ற பயங்கர விபத்து குறித்து பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :-
நினைத்தே பார்க்கமுடியாத பயங்கர சம்பவங்களெல்லாம் நடக்கும் இடம் தமிழகம்,நேற்று அங்கு நடந்த விபத்தொன்று அதிர்ச்சியின் உச்சத்தினை தொடுகின்றது, தமிழகம் மதுரையினை சேர்ந்த இருவர் நிலகோட்டை அருகே நடந்த விபத்தில் இதுவரை இல்லா அளவு கொடுமையாக கொல்லபட்டிருக்கின்றனர்
அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதிகொண்டதில் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசபட்டு மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியில் சிக்கியிருக்கின்றனர், அதில் ஒருவன் கீழே விழுந்து இறக்க இன்னொருவன் மின்கம்பியிலே சிக்கி தொங்கி செத்துவிட்டான், சடலம் நீண்ட நேரம் தொங்கி கொண்டே இருந்திருக்கின்றது
மிக உயரமான அந்த மின்கம்பிக்கு அடியில் அவர்களை சரியாக மோதவைத்தது விதி என்றாலும், இவ்வளவு உயரத்துக்கு அவர்கள் தூக்கி எறியபட்டிருப்பது என்பது மோதிய வேகத்தை சொல்கின்றது, மிக கடுமையான வேகத்தில் மோதியிருக்கின்றார்கள்
இதில் இனி மின்கம்பிகளின் உயரம் கண்காணிக்கபட வேண்டும், மின் கம்பி செல்லும் பகுதியில் வாகனமோட்டிகளின் வேகம் மட்டுபடுத்தபட வேண்டும் என பல எச்சரிக்கைகளை தவிர வேறொன்றும் படிக்க முடியாது இரு உயிர்கள் மிதமிஞ்சிய வேகத்தில் பறிக்கபட்டிருக்கின்றன, அக்குடும்பங்கள் தீரா சோகத்தில் சிக்கியிருக்கின்றன, போதை மருந்து போல இந்த மித மிஞ்சிய வேகமும் மகா ஆபத்தானது என்பதை இளைய தலைமுறை புரிந்து கொள்ளல் வேண்டும்,
இந்தியாவில் பெருகியிருக்கும் சாலை வசதி நெருக்கடியினை குறைத்து சீரான போக்குவரத்தை மேம்படுத்த அன்றி இப்படி உயிரை விட அல்ல என்பதை வாகன ஓட்டிகள் உணரும்படி லைசென்ஸ் வகுப்புகள் கடுமையாக்கபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.