சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம் இந்தப்படத்தில் தொடக்கம் முதலே அரசியல் தொற்றிகொண்டது காரணம் உண்மை கதையை மையமாக கொண்ட திரைப்படம் என படகுழுவினர் தெரிவித்ததும், ஆனால் உண்மை சம்பவத்திற்கு மாறாக கதையை படக்குழு மாற்றியதும் சர்ச்சை வெடித்தது.
1990களில் கடலூர் மாவட்டத்தில், கம்மாபுரம் என்ற காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடலை திருச்சி மாவட்ட எல்லையில் போலீசார் தூக்கி எறிந்து, ராஜா கண்ணு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்தனர்.
ராஜா கண்ணுவின் மனைவி பார்வதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சந்துரு, வக்கீலாக பணி செய்த போது இந்த வழக்கிற்காக சட்டப் போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தார்.
இந்த வழக்கு நடத்த முக்கிய காரணமாக இருந்தவர் அந்த ஊரை சேர்ந்த அப்போதைய பஞ்சாயத்து தலைவர் கோவிந்தன் அவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சூழலில் திரைப்படத்தில் உண்மை கதைக்கு மாறாக உதவி செய்த வன்னியர்களை தவறாக வில்லனாக சித்தரித்து கதை அமைந்தாக வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு அதிகமானதை தொடர்ந்து சர்ச்சை குறிய காலண்டர் நீக்கப்பட்டு, புது சர்ச்சையாக இந்து அடையாளம் புகுத்தபட்டது, இந்த சூழலில் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ஜெய்பீம் திரைப்படம் எடுத்த சூர்யாவை கண்டித்து விளக்கம் கேட்டு கேள்விகளையும் எழுப்பி இருந்தார்.
இந்த விவகாரதித்தில் தற்போது இயக்குனர் பிரவீன் காந்தி விவாதம் ஒன்றில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது அதில், தற்போது சினிமாவில் ஒரு புது ட்ரெண்ட் உள்ளது கிறிஸ்தவர்களை தவறாக காட்ட கூடாது, இஸ்லாமியர்களை தவறாக காட்ட கூடாது மேலும் சில சாதிகளை தவறாக காட்ட கூடாது.
ஆனால் மற்றவர்களை போகிற போக்கில் குத்தி விட்டு செல்லலாம், உண்மையில் சர்ச்சையை உண்டாக்கி பணம் சாம்பாரிப்பதை நினைத்தால் கேவலமாக இருக்கிறது, நான் சினிமா துறையில் இருந்து கொண்டே சொல்கிறேன், 80 மற்றும் 90 களில் நடந்த நிலை வேறு இப்போது தமிழர்களாக இந்தியர்களாக இருக்கிறோம் இப்போது வந்து பழசை எடுக்கிறோம் என தவறாக செல்லவேண்டாம் எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.
பிரவீன் காந்தி பேசிய பேச்சுக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதனை பார்க்க கிளிக் செய்யவும்